- கவிஞர் க. யாஸ்மின் சிராஜுதீன்
தினம் தினம் தொடர்கதையே.. பெண்களுக்கு விடுமுறை என்ற நாள் இல்லவே இல்லையே.. ஞாயிற்று கிழமைகூட __ விடுமுறை இல்லா விடுமுறை தாங்க .... எப்படினு கேக்குறீங்களா!
விடுபட்ட வேலை எல்லாத்தையும் விடுபடாம செய்யுறோம்ல.. வீட்டின் குத்துவிளக்கு, பம்பரமாக சுழலும் உழைக்கும் கரங்கள் பெண்கள்னு சொல்லி சொல்லியே எல்லா வீட்டு வேலையும் செய்ய வச்சிடுறாங்க.. எவ்வளவு வேலை செய்தாலும் வீட்டு வேலைகள் முடிவில்லாத தொடர்கதையே.
வெளியிலே சென்று கூட வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து விடலாம் போல, வீட்டு வேலைகள் இருக்கே அப்பப்பா... என புலம்பிக்கொண்டே வீட்டை ஒட்டடை அடித்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள் கீதா. இதையெல்லாம் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் துணி தேய்த்து (அயன்) கொடுக்கும் வாணி .
ஏம்மா .... கீதா.. என்ன காலையில புலம்பிகிட்டு இருக்கிற... இன்னிக்கு லீவுதானே வீட்டு வேலைய நல்லா செய் .. .. வாங்க... மேடம் வாங்க ... இத சொல்லத்தான் வந்தீங்களோ... துணி எவ்வளவு சேர்ந்திடுச்சி பாருங்க துவைத்த துணிய சோபால (sofa) போட்டு வச்சிருக்கேன். எண்ணி எடுத்துட்டுப் போங்க என்றாள் கீதா.

என்னையே எண்ண சொல்லுறியே.... துணிய எண்ணி மூட்டையா கட்டி வச்சா நா எடுத்துட்டு போவேன் இல்ல .நீ என்னத்ததா பன்ற என்றாள் வாணி.
என்ன பண்றனா கேக்குற வாணி. நான் என்ன வீட்ல சும்மாவா ஹாயா "ரெஸ்ட்டா" எடுக்குறேன், தூக்க கலக்கம் தெளியாம வீடு, வாசல் பெருக்கி , என்ன சமைப்பதுன்னு தெரியாம அடுப்பங்கரையில நின்னுகிட்டு அரிசியை ஊற வச்சி, அங்க இங்க ஓடி, குளிர்சாதன பெட்டியில எதையோ தேடி , சில சமயம் ஏன் குளிர்சாதனப்பெட்டிய திறந்தோம்னு தெரியாம, அட பைத்தியமேன்னு என்ன நானே திட்டி மறுபடியும் யோசிச்சி எடுக்க வந்தத எடுத்து பருப்பு, காய்கறி எல்லாம் போட்டு, சாம்பார் வைச்சி, சாதம் வடிச்சி, காய்கறி பொறியல் செய்து இட்லி சுட்டு, சட்னி அரைச்சி, இதற்கு நடுவுல டீ , காபி வீட்டுல பெரியவர்களுக்கு போட்டு கொடுத்தா;
இவ்ளோ லேட்டா போட்டு கொடுக்கிறான்னு பெரியவங்க சொல்றதைக் கேட்டுக்கிட்டு கோபம் வந்தாலும் மனச லேசாக்கிட்டு, கையும் காலும் ஓடலை.. கடிகாரம் சுவர்ல ஓடுதோ இல்லையோ, எம் மனசுல கடிகாரம் வேகமா ஓடுது, சமையல் தடபுடலா நடக்குது அடுத்தது என்ன... அடுத்தது என்ன ...என மனசு வேகமா வேலைய பாக்குது.. மனசு இறக்க கட்டி பறக்குது.
மகளுக்கு மகனுக்கு, கணவருக்கு என டிபன் பாக்ஸ் ரெடி பண்ணி இதற்கு இடையில மகளுக்கு ஜடையை பின்னி, கணவரை ஆபிசுக்கும், குழந்தைகளை பள்ளிகூடத்துக்கும் அனுப்புற வரைக்கும் நான் படும்பாடு இருக்கே சொல்லி மாளாது. அப்புறம், அடுப்பங்கரைய திரும்பிப் பார்த்தா சமையல் அறையே போர்க்களம் போல காட்சியளிக்குது.
மூச்சுவிட நேரமில்ல ... நீ என்ன சுத்தம் செய்யமாட்டியான்னு சமையல் அறை கேக்குற மாதிரி இருக்கு ,...சரி.. சரி.
..உன்ன முதல்ல சுத்தம் பன்றேன்னு சொல்லிட்டு சுத்தம் பண்ணா ...பாரு.. அது ...என்ன பாத்து பளபளப்பாக சிரிக்குது. சுத்தம் சுகம் தரும்னு நினைச்சுகிட்டு எனக்கு நானே சிரிச்சிகிட்டு, அடுத்து என்ன. நான் ரெடியாகி என்னுடைய அலுவலகத்துக்கு நடையக் கட்டணும்.
என்னது நடந்தா போக போற என்றாள் வாணி. நீ வேற நடந்து இல்ல வண்டியில தான், நேரமோ கால்ல சக்கரம் கட்டிக்கிட்டு ஓடுது. இதுக்கு நடுவுல சப்போட்டுக்கு கடவுள வேற கூப்பிடுகிறேன். நேரம் ஆக கூடாது. நான் சீக்கீரமா ரெடி ஆகிடனும்னு. ஒருவழியா ரெடி ஆகிட்டா.. அப்பதான் மெஷின்ல துணி துவைக்கப் போட்ட ஞாபகம் வரும்.. ஓடு ...ஓடு.. ஓட்ட பந்தய வீராங்கனை மாதிரி மாடிக்கு ஓடி, மூச்சு வாங்க வாங்க, துணிய காய போட்டுட்டு மறுபடியும் குடு..குடு...ன்னு படி இறங்கி வீட்டபூட்டிஅலுவலகத்துக்கு சென்று பரபரப்பா வேலை எல்லாம் முடிச்சிட்டு மாலை வீடு திரும்பினா.. மீண்டும் சமையல் அறையில் டீ , காபி போட ஆரம்பிச்சு.. மறுபடியும் தொடருது.. தொடர்கதையா.
வேலை குறைந்தபாடில்லை. இரவும் உறங்க சொல்லுது .. பொழுது விடிந்தது தெரியல. அலாரம் மணி "ஐந்து "என எழுப்புது. மீண்டும் அடுப்பங்கரையில நிக்குற தூக்க கலக்கம் கலையாமலே, ஏதோ சிந்தனை மனசில் ஓ...டுது. பெண்களை நினைத்துதான். மனவலிமை அதிகம்தான். சமையல் அறை மட்டும் நமக்கு சொந்தமா இல்லை.. இல்லை... எல்லாத்துறையிலும் பெண்கள் சாதிக்கிறோம் . வீட்டு நலன் மட்டும் இல்லாமல் நாட்டு நலனை காப்பதிலும் பங்கு வகிக்கிறோம் .
பெண்களின் சாதனைச் சிந்தனை மனதில் தவழுது ,பெருமை கொள்ளச்செய்யுது சமையல் அறையில் நான் ... இல்லை.. இல்லை.. எல்லாத்துறையிலும் நாம். அப்பப்பா எத்தனை எத்தனை பொறுப்புகள் .. பெண்களுக்கு குடும்ப வேலைகள் சுமை கிடையாதுங்க , வேலைகள் அனைத்தையும் செய்வதற்கு சிறிது கஷ்டம்தான். ஆனால் இஷ்டப்பட்டு செய்வதால் குடும்பமே சொர்க்கம்தான்.. "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் புகழ்பெற்ற வரிகள் என்னை மிகவும் பெருமைகொள்ளச் செய்தது.
பெண் என்பதில் பெருமைதான் (பொருள்: பெண் பிறவி என்பது சாதாரணமானதல்ல; உயர்ந்த அறங்களையும் அன்பையும் இந்த உலகில் வளர்க்கும் பெரும் பேறு பெண்களுக்கே உண்டு என்பதைப் போற்றும் வரிகள் இவை) வேலை என்பது தினம் தினம் தொடர்கதைதான்.
சரி சரி கீதாம்மா துணி எண்ணி எடுத்துக்கிட்டேன், நேரமாச்சு. எனக்கு நிறைய வேலை இருக்கு. அப்புறம் பேசலாம், எனக்கும்தான் நிறைய வேலை இருக்கு. சரி போய்ட்டு வா என வேலைய தொடர்ந்து செய்ய ஆரம்பித்தாள் கீதா. வீடு, ஆபீஸ் வேலை வேலைன்னு எல்லா பெண்களையும் போல் சுழன்று கொண்டே இருக்கிறாள் கீதா.
தினம் தினம் தொடர்கதைதான்..!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!
No Sunday leave for Women: தினம்தினம் தொடர்கதையே!
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
{{comments.comment}}