நாளும் வாழ்க்கையும்!
- க. யாஸ்மின் சிராஜூதீன்
ஒவ்வொரு நாளும் தொடங்கும்
வெள்ளைக் காகிதமாய்.....
ஒவ்வொரு இரவும் கடக்கும்
வண்ணக்காகிதமாய்......
வாழ்க்கை ஒரு
புத்தகமாய்...
ஒவ்வொரு பக்கத்திலும்
திருப்பு முனையாய்.....
தினமும் பக்கங்கள் புத்துணர்வாய்......
ஏங்கி காத்திருக்கும் உன்
பதிவுக்காய்...
உன் வாழ்க்கைப் புத்தகம்
உனக்கே உனக்காய்.....
நீ மட்டும் வண்ண ஓவியம் தீட்டுவதற்காய்....
பக்கங்கள் புரட்டி முதுமையில் ரசித்து வாழ்வதற்காய்..
இளைய தலைமுறைக்கு
அனுபவம் கூறுவதற்காய்....
உனக்கு சிறந்த நண்பன் நீயே ஆவதற்காய்.....
பிறரும் புரட்டிப் படிக்கும்வரலாறு ஆக்குவதற்காய்......
ஒவ்வொரு நாளும் வாழ்க்கைப்புத்தகத்தில் அங்கம்தான்.......
நம் வரலாறு கூறும் காலச்சுவடிதான்!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)