- க. யாஸ்மின் சிராஜூதீன்
தனிமை என்பது கொடுமைதான் ....
விரும்பி இருப்பது ஓய்வுதான்...
படைப்பாளிக்கு சிந்தனைதான்...
பெற்றோருக்கு கடினம்தான்..
முதியோர்களுக்கு நரகம்தான்..
முதியோர் இல்லங்கள் நிறையும்தான்...
பிள்ளைகள் கொடுக்கும் பரிசுதான்..
இமைபோல் காப்பவள் தாய்தானே....
அயரா உழைப்பால் வளர்ப்பவர் தந்தைதானே..
பெற்றோர் அன்பை வெல்லவே
உலகில் எவரும் இல்லையே...
பிள்ளைகள் அன்பு என்பது
எதுவரை என்பது தெரியல...
அனைத்து பிள்ளைகளுக்கும்
பொருந்தாது....

தாய் தந்தையின் அன்பு சொர்க்கம்தான்...
கலப்படம் என்பது இல்லைதான்....
பிள்ளைகள் அன்பில் போட்டிதான்...
சிறுவயதில் உண்மைதான்...
வளர்ந்தபின் மாற்றம்தான்...
ஆண்,பெண் பேதமில்லை தான்...
உந்தன் பிள்ளை கண்டிடும் இன்று
இந்த காட்சிதான்....
நாளை உனக்கு தொடரும்தான்...
பிள்ளைகள் மனதில் செயல்கள்தான்
பசுமரத்தானி தான்...
நல்ல செயல்களை செய்திடு ...
சிறந்த விதையாய் விதைத்திடு...
தாயும் மாமியாரும் அம்மாதான் ...
தந்தையும் மாமனாரும் அப்பாதான் ...
நாளை நாமும் அடைவோமே இப்பதவிதான்....
உலகம் இருக்குது பரந்து விரிந்துதான்...
வாழ்கை அதிலே ஒரு புள்ளிதான்..
சுயநலம் தூக்கி எறிந்திடுவோம் ..
நம் குடும்பம் தழைக்க செய்திடுவோம்...
மனமார வாழ்த்த வாழ்ந்திடுவோம்...
தனிமை என்பது கொடுமைதான் ..
அதை தூக்கி எறிந்தால் இனிமைதான்.
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}