சிரிப்பு வருதா.. சிரிங்க பாஸ்.. நல்லா வாய் விட்டு சிரிங்க.. உடம்புக்கு நல்லது!

Mar 19, 2026,03:20 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்ற புகழ்பெற்ற  பழமொழியின் சிறப்பை இன்றைய நாளில் கொண்டாடுவோம்.


மனமகிழ்ச்சியுடன் வாய்விட்டு சத்தமாகச் சிரிப்பது, மன அழுத்தம் மற்றும் கவலைகளைப் போக்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்களைக் குறைக்கிறது என்று  மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. 


National Let's Laugh Day (தேசிய சிரிப்பு நாள்) 


தேசிய சிரிப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 19 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மகிழ்ச்சியாக சிரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கொண்டாடப்படுகிறது.


சிரிப்பு மனிதனின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு இயற்கை மருந்தாகும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பார்க்க வேண்டும். கவலைகளையும், நோய்களையும் தூர எறிய தினமும் வாய்விட்டு சிரிப்போம்.


சிரிப்பதால் உடல்நலம் மற்றும் மனநலம் மேம்படுவதோடு மக்களின் உறவுகளை வலுப்படுத்த உதவுகிறது என்பது முற்றிலும் உண்மையாக இருக்கிறது .




 வாழ்க்கையை நேர்மறையாக பார்க்க உதவுகிறது. இந்த நாள் அனைவரையும் மகிழ்ச்சியாக இருக்க ஊக்குவிக்கிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சிரித்து மகிழ்சியாக வாழ்வதற்கு ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டும்.


சிரிப்பு மன அழுத்தத்தை குறைப்பதோடு உடலில் நல்ல ஹார்மோன்களை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.


இன்றைய காலகட்டத்தில் பெரிதும் சர்க்கரை நோய் மற்றும்  இதய நோயால்  பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. வீட்டில் உள்ளவர்களிடமும்,சமுதாயத்தில் உள்ளவர்களிடமும் மனம் விட்டு சிரித்து பேசுபவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதை உணர வேண்டும். 


கோவமாக ஒருவர் பேசும் பொழுது நாம் பதிலுக்கு அவரிடம் கோபத்தை காட்டாமல் லேசாக புன்முறுவல் செய்வதால் 

வாழ்க்கையின் சிரமங்களை சமாளிக்க உதவுகிறது. ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாமல் எளிதில் அனைவரிடமும் சிரித்து மகிழ்வாக காணப்படுவோம். சிரிப்பு மனிதனின் வாழ்க்கையை இனிமையாக்குகிறது என்பதை உணர்ந்து சிரித்து மகிழ்வோம். 


காரணம் இன்றி ஒருவரை பார்த்து சிரிப்பதும்,கேலியாகவும், நக்கலாகவும் சிரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  

இந்த நாள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள நினைவூட்டுகிறது. இதனை அறிந்து அனைவரும் கவலை இல்லாமல் சிரித்து வாழ்வோம் .


சிரிப்பு வாழ்க்கையை ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் மாற்றுகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பார்த்து கோவம் இல்லாமல் சிரித்த முகத்தோடு வாழ்ந்து காட்டுவோம். கவலைகளையும், நோய்களையும் தூர எறிய தினமும் வாய்விட்டு சிரிப்போம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

எங்கள் தெருவிலும் பிள்ளையார்.. அழகிய சிங்கரின் என்பா

news

எந்தன் ஈசனே! சிவனே!

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

அதிகம் பார்க்கும் செய்திகள்