சர்தார் வல்லபாய் படேல்.. ஒற்றுமையே நம் பலமாகுமே!

Su.tha Arivalagan
Oct 31, 2026,03:17 PM IST

- கவிஞர் க. யாஸ்மின் சிராஜுதீன்


சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரே!

இந்தியாவின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவரே!


பல சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே இந்தியாவை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவரே!

மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டவரே!


விவசாயிகளின் உரிமைக்காகப் போராடியவரே!

பார்டோலி சத்தியாகிரகத்தில் முக்கியப் பங்கு வகித்து, 'சர்தார்' என்ற பட்டம் பெற்றவரே!


இந்தியாவின் ஒற்றுமைக்கு வித்திட்டவரே!

நாட்டின் முதல் துணைப் பிரதமரானவரே!

உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியவரே!


தமது சிறப்பான பணியால் 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று போற்றப்படுகிறாரே!




ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி இவரது பிறந்தநாளே

'தேசிய ஒற்றுமை தினமாக'க் கொண்டாடப்படுகிறதே!


குஜராத் மாநிலத்தில் இவருக்கு நினைவாக ஒற்றுமைச் சிலை (இவரது 143-வது பிறந்தநாளில்) அமைக்கப்பட்டுள்ளதே!


இதுவே உலகின் மிக உயரமான சிலையாகுமே!

182 மீட்டர் (597 அடி) உயரம் கொண்டது இதன் சிறப்பாகுமே!


1991-இல் இவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டதே!

தமது 75 ஆம் வயதில் இயற்கை எய்தினாரே (1950 டிசம்பர் 15).


இவருடைய தன்னம்பிக்கை, துணிவு, தலைமைப் பண்பு ஆகியவை அனைவருக்கும் முன்னுதாரணமாகுமே!


சர்தார் வல்லபாய் படேல் நாட்டுப்பற்றுக்கும் ஒற்றுமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறாரே!

இவரது வாழ்க்கை நமக்குச் சிறந்த வழிகாட்டியே!

இவரது புகழ் என்றும் நிலைத்து நிற்குமே!

சர்தார் வல்லபாய் படேல் ஒரு சிறந்த தலைவர் மட்டுமில்லை,

இந்திய ஒற்றுமையின் அடையாளமாகவும் திகழ்ந்தவரே!


தன்னுடைய அயராத உழைப்பு, துணிவு, உறுதி, நாட்டுப்பற்று ஆகியவற்றால் சிதறிக் கிடந்த சமஸ்தானங்களை ஒன்றிணைத்து வலிமையான இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டவரே!


அவரது தியாகமும் தொலைநோக்குச் சிந்தனையும் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்க வேண்டுமே!


அவரது வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் சாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழவேண்டுமே!


நம் நாட்டின் பெருமையையும் ஒற்றுமையையும் காப்போமே!

ஒற்றுமையே நம் பலமாகுமே!

இந்தியாவே நம் பெருமையாகுமே!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கரடிக்குப்பம், மேல்மலையனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கவிதை (தமிழ் மற்றும் ஆங்கிலம்), சிந்தனை துளிகள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), சிறுகதை, கட்டுரை , வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்.