Good touch & bad touch மட்டுமல்ல.. பெண் பிள்ளைகளுக்கு வீரக் கலைகளும் அவசியம்!

Su.tha Arivalagan
Jan 24, 2026,03:44 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற பாடிய கவிமணி வரியை சிறப்பிக்க என்ன தினம் கொண்டாடலாம்?


இந்தியாவில் பெண் குழந்தைகளின் உரிமைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .


இந்த தினத்தின் சிறப்புகளை தெரிந்துக்கொண்டு மகிழ்ச்சி அடைவோம். ஏன் ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது?


இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டது.




தேசிய பெண் குழந்தைகள் தினம் 2008 ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.


ஜனவரி 24, 2026 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண் கல்வியை வலியுறுத்தியும், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தும், பெண் சிசுக் கொலையைத் தடுப்பதற்கு முக்கிய விழிப்புணர்வு முழக்கங்கள்:


பெண் குழந்தையைக் காப்போம்;படிக்க வைப்போம் ; நாட்டை உயர்த்துவோம்.

பெண் கல்வி அறிவொளி வீசும்; குடும்பத்தை உயர்த்தும்.

பெண் குழந்தை சுமையல்ல; அது ஒரு ஆசீர்வாதம் ; காப்போம், உயர்த்துவோம்.

ஆண், பெண் இருபாலரும் சமம் - பெண்ணே! உனக்கு உரிமை சமம்.

கல்வி அறிவை ஊட்டு, பெண் குழந்தையை வளர்த்து காட்டு. 

2026-ம் ஆண்டு தேசிய பெண்கள்  தினத்திற்கான சிறப்புக் கருத்துகள்:

பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, ஆரோக்கியமான, சமமான உலகம் அமைப்போம்.

பெண் குழந்தைகளின் கனவுகளைச் சிறகடிக்க வைப்போம், தடைகளை உடைப்போம். 


இந்த முழக்கங்கள், பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் சமூகத்தில் அவர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தப் பயன்படும்.


ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் அதிகாரம் அளித்து, கல்வி கற்பித்து, அவர்களை உயர்த்துங்கள். அவர்கள் தான் நாளைய உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்.


தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.ஒரு பெண் குழந்தை ஒரு புதையல், பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் தீப்பொறி என்பதை உணருங்கள்.


பெண் குழந்தைகள் குடும்பத்திற்கு விளக்கு போன்று பிரகாசமாக இருப்பார்கள் . தனக்கு ஏதேனும் தீங்கு செய்ய நினைத்தால் எதிர்த்து போரடவும் செய்வாள் என்பதை உணருங்கள்.


ஆண் குழந்தை, பெண் குழந்தை என வேறுபாடுகள் பார்க்காமல் இருவரையும் சமமாக மதித்து அவர்கள் விரும்பும் கல்வி, வேலைவாய்ப்பு,திருமணம் போன்றவற்றை செய்து கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.


பெண் குழந்தைகளுக்கு திருமணத்திற்கு பணம் சேர்க்க வேண்டும் என்று காரணம் அவர்களின் படிப்பு மற்றும் வேலைகளுக்கு இடையூறு செய்யாமல் இருப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.


Good touch & bad touch சொல்லி தருவதை போல் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கு வீரக் கலைகளை சொல்லி தர உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.