பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகளில் ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 7 சதவீதம் அளவுக்கு அதிகமாக உள்ளது.
இன்று வெளியான பிளஸ்டூ தேர்வு முடிவுகளில் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் எப்படி உள்ளது என்பது குறித்துப் பார்ப்போம்.
மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,536.
100% தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் -2,639.
95% தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை -5,170.
100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை -489.
95% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் 6 -1,572.
பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவீதம்:
1. அரசுப் பள்ளிகள் - 92.16%
2. அரசு உதவி பெறும் பள்ளிகள் - 96.14%
3. தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 98.72%
4. இருபாலர் பள்ளிகள் - 95.30%
5. பெண்கள் பள்ளிகள் - 97.08%
6. ஆண்கள் பள்ளிகள்- 90.49%
பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.59% சதவீதம் கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 4.81% சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,855.
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 6,811 (76.92 %).
தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 250.
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 238(95.20%).
தேர்வெழுதிய இரண்டாமாண்டு தனித்தேர்வர்கள் எண்ணிக்கை 25,521.
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 6,171 (24.18%).
மேல்நிலை முதலாம் ஆண்டு - (மார்ச்2026):
பொதுத் தேர்வு தேர்வெழுதிய முதலாம் ஆண்டு தனித்தேர்வர்கள் எண்ணிக்கை 20444.
தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 8491 (41.53%).