திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை

Su.tha Arivalagan
Mar 03, 2026,05:02 PM IST

சென்னை : திமுக- காங்கிரஸ் கூட்டணியில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு தமிழக அரசியல் களத்தையே உற்று கவனிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஊடகப் பிரிவுத் தலைவருமான கோபண்ணா, கட்சியின் கூட்டணிக் கொள்கை மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து மிக முக்கியமான கருத்துக்களை முன் வைத்துள்ளார்.


திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது :




தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக இந்தக் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான செல்வப்பெருந்தகை மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் திமுக-வுடனான உறவு நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ வடிவம் பெறும் என்று கோபண்ணா தெரிவித்துள்ளார்.


தவெக-வுடன் கூட்டணி? கோபண்ணாவின் கடும் எதிர்ப்பு :


அதே சமயம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கூட்டணி அமைக்கக்கூடும் என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கோபண்ணாவின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அவர் கூறுகையில், 140 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட பேரியக்கமான காங்கிரஸ், "நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானைப் போன்ற" தவெக-வுடன் கூட்டணி வைப்பது வேதனையளிக்கிறது. தவெக-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது அரசியல் ரீதியாக தற்கொலை செய்து கொள்வதற்குச் சமமானது என அவர் எச்சரித்துள்ளார்.


தமிழக அரசியலில் புதிய கட்சிகளின் வரவு அதிர்வுகளை ஏற்படுத்தினாலும், காங்கிரஸ் தனது பலமான மற்றும் நீண்டகாலக் கூட்டாளியான திமுக-வுடனேயே பயணிக்க விரும்புவதை கோபண்ணாவின் இந்த அதிரடி கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன. திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று மாலைக்குள் கூட்டணி குறித்த இறுதி முடிவு தெரிந்து விடும் என கூறப்பட்டு வரும் நிலையில் போபண்ணாவின் இநு்த பேச்சு திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றுள்ள காங்கிரஸ் முக்கிய தலைவர்களான செலச்வ பெருந்தகை, ப.சிதம்பரம் ஆகியோர் சென்றுள்ள நிலையில், இந்த ஆலோசனையில் என்ன முடிவு எடுக்கப்பட உள்ளது. காங்கிரஸ் யார் பக்கம் செல்ல போக்கிறது என்ற முடிவை பொறுத்தே தமிழக தேர்தல் களம் மாறும் என சொல்லப்படுகிறது.