திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை

Mar 03, 2026,06:19 PM IST

சென்னை : ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் உள்ளே எழுந்துள்ள அதிருப்திக் குரல்களும், மூத்த தலைவர்களின் அவசர ஆலோசனைகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


சமீபத்தில் தமிழக அரசியலில் நுழைந்துள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணை மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "140 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் பேரியக்கம், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானைப் போன்ற தவெக-வுடன் கூட்டணி வைப்பது என்பது தற்கொலைக்குச் சமம்" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். தவெக-வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், இது மிகுந்த வேதனையளிப்பதாகவும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.




ஒருபுறம் அதிருப்திக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்க, மறுபுறம் தேர்தல் வியூகங்கள் வகுக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மூத்த தலைவர் ப.சிதம்பரம் இல்லத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். அதற்கு பிறகு இருவரும் ஒரே காரில் சென்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளனர். 


திமுக-காங்கிரஸ் குறித்த இறுதி கட்ட பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் இன்று முதல்வருடன் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில் செல்வபெருந்தகை, ப.சிதம்பரம், திமுக எம்.பி.,க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.


இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகே நீண்ட காலமாக தொடர்ந்து வரும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா அல்லது உடையுமா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்