பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

Jul 21, 2026,05:08 PM IST

புதுடெல்லி: டெல்லியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய கடுமையான தடியடி சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


டெல்லியில் பதற்றம்: 

தலைநகர் டெல்லியில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களைக் கலைப்பதற்காக காவல்துறையினர் தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? 




இச்சம்பவம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் மீது காவல்துறையினர் மிகக் கொடூரமாகத் தடியடி நடத்தியுள்ளனர். இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் பிரதமர் நரேந்திர மோடி இதில் எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்? இளைஞர்களின் குரலை நசுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பிரதமர் மோடி முழுப் பொறுப்பேற்க வேண்டும். தடியடி சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட இளைஞர்களிடமும் நாட்டு மக்களிடமும் பிரதமர் மோடி உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.


வலுக்கும் எதிர்க்கட்சிகளின் கண்டனம் : 

இளைஞர்கள் மீதான தடியடி சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. நாட்டின் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பும் இளைஞர்களின் குரலை அடக்குமுறையைக் கொண்டு நசுக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனப் பல தலைவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். டெல்லியில் நிகழ்ந்த இந்தத் தடியடி சம்பவத்தைத் தொடர்பாக பார்லிமென்ட்டில் இரண்டாவது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 2வது நாளாக லோக்சபா அலுவல்கள் முடங்கின.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்