மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

Jul 21, 2026,05:07 PM IST

டில்லி : இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கூட்டத்தொடரின் 2ஆவது நாளான இன்று, எதிர்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


டெல்லி தடியடி சம்பவத்திற்கு கடும் கண்டனம்

தேசியத் தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் கூட்டாக தங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன. இன்றைய அவைத் தலைவர் அமர்வில் அமர்ந்ததும், டெல்லி தடியடி சம்பவம் குறித்து உடனடி விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மேலும், இச்சம்பவத்துக்குப் பொறுப்பேற்று உரிய விளக்கம் அளிக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர்.


அமளியால் முடங்கிய அவை நடவடிக்கைகள்




கூச்சலும் அமளியும் நீடித்ததால், அவைத் தலைவர் உறுப்பினர்களை அமைதி காக்குமாறும், கேள்வி நேரத்தை தடையின்றி நடத்த ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தித் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனைத் தொடர்ந்து, அவையின் அமைதியை நிலைநாட்டவும், சுமூகமான சூழலை உருவாக்கவும் மக்களவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் அறிவித்தார்.


நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இளைஞர்கள் பலர் கடந்த சில நாட்கள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை தடுக்க இளைஞர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி போலீசார் தாக்குதல் நடத்தினர். போராட்டம் மேலும் பரவாமல் இருக்க டில்லியில் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் காயமடைந்த மாணவர்களும் போராட்டம் நடத்தி, பார்லிமென்ட் நோக்கி செல்ல திட்டமிட்டிருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்