10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1931 அரசுப் பள்ளிகள் சென்டம் போட்டுள்ளன. அதாவது 100 சதவீத தேர்ச்சியைக் கொடுத்து அசத்தியுள்ளன.
பள்ளிகள் எந்த அளவுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தைக் காட்டியுள்ளன என்ற விவரத்தைப் பார்ப்போம்.
தேர்வு எழுதிய மொத்த பள்ளிகள்: 12,467
மேல்நிலைப் பள்ளிகள்: 7,490
உயர்நிலைப் பள்ளிகள்: 4,977
100% தேர்ச்சி பெற்ற மொத்த பள்ளிகள்: 5,171
95% மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்ற மொத்த பள்ளிகள்: 8,233
அரசுப் பள்ளிகளின் சாதனை
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களும் இந்த ஆண்டு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள்: 1,931
95% மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள்: 3,4633.
பள்ளிகளின் தேர்ச்சி விவரம்:
அரசுப் பள்ளிகள் 91.86%
அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34%
தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.14%
இருபாலர் பள்ளிகள் 94.42%
பெண்கள் பள்ளிகள் 96.42%
ஆண்கள் பள்ளிகள் 88.50%
பெண்கள் பள்ளிகள், ஆண்கள் பள்ளிகளை விட 7.92% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளன. இருபாலர் பயிலும் பள்ளிகள், ஆண்கள் பள்ளிகளை விட 5.92% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளன.