கோகுலம் காத்த கோபாலனே.. காலத்தைக் காத்த காகுத்தனே?
- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
கல்விச்செல்வம் பெற அகாரஹரியை அகத்திலே வை
நன்மையடைந்திட நாரணஹரி கூறிடு
அருளைப்பெற அமுதஹரி நினை
செல்வம் நிலைபெற நித்யமாய் ஹரிநாமம் சொல்லிடு நெஞ்சே!
கோவிந்தன் குணம் பாடுவோம்!
பசுபாலனின் லீலைகளை ரசித்திடுவோம்!
மறை போற்றும் மாலவனை வணங்கிடுவோம்!
மனம் கவர்ந்த பூபாலனே!
அடியோங்கள் பாதங்கள் களையும் பராந்தாமனே!
கோகுலம் காத்த கோபாலனே
காலத்தை காத்த காகுத்தனே
பாலகனாய் வந்த கிருஷ்ணா
கார் மேகமென கருணை பொழியும் வடுவூர் வடிவழகா
நாகணையில் யோகுதுயில்வோனே பல்லாண்டு பல்லாண்டு
ஆயர்புத்திரனே! அருந்தெய்வமே!
பாணைக்கு மோட்சமளித்த கார்மேகமே!
வில்லொடித்து ஜனகர்மகளை மணந்தோனே!
உயர்வற உயர்நலமுடையோனே!
ஏழு எருதடைக்கி நப்பினையை மணந்த பாலகனே!
பாரோர் புகழும் புருஷோத்தமா
முலையுண்ண வந்திடுவாய்!
ஸ்ரீ விஷ்ணு சித்தஹரி
குலநந்தனஹரி கல்பவல்லிம்
ஸ்ரீ ரங்கராஜஹரி
ஹரிசந்தனஹரி
யோகஹரி
கருணையே கருணையின் ஹரி
கோதாம்ஹரி சரணம் சரணமம்மா
கங்கையை போல் சிறந்த
தண்ணீர் இல்லை!
விஷ்ணுவை போல சிறந்த தெய்வம் இல்லை!
தாயிற் சிறந்த கோயில் இல்லை!
காயத்ரியைக் காட்டிலும் உயர்ந்த மந்திரம் இல்லை!
ஏகாதசியைக் காட்டிலும் சிறந்த விரதம் இல்லை!
நம்பாடுவான் கைசிகப்பண்பாடி
கைசிக ஏகாதசியிலே ஏற்றம் பெரும்
திருக்குறுங்கூர் அழகியநம்பியின் பாதம் பணிவோம்
கண்ணனே எங்கள் காகுத்தனே
வண்டுகள் ரீங்காரமொலிக்கும்
சோலைமலையில் நூபுரகங்கையில்
கருணைபொழியும் சுந்தரத்தோளுடையானே!
நீயே கதியென வந்த அடியேனையேற்றருள்வாயாக!
சுந்தரவள்ளித் தாயாருடனே
கற்புரம் வாசமோ கமலப்பூ மணமோ
நற்கொழுந்தின் மணமோ
கற்பக சோலையிலே
ஸ்ரீரங்கநாயகியே நின் கருணை மணமதிலே மயங்கி நிற்கிறேன் தாயே
மற்றோர்தெய்வம் நிகரில்லையம்மா
நீயொருத்தியே கருணைவிழி விளைநிலமே
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)