- கோ.அறிவுசெல்வி இராஜாராம்
கார்கால கண்ணா!
கார்மேகவண்ணா!
காலமெல்லாம் காத்திருப்பேனுன்
காலடியே தஞ்சமென
காசினியிலே! காகுத்தனே!
காட்சியானாய் காவியமுமானாய்
காருணிகனே காவேரியின் காயாம்பூவானவனே!

தயிர் மோர் வெண்ணெய் உருட்டி விழுங்கி
தாமோ தவழ்ந்து யோகுதுயில் துயின்றாயே
தாம்பினால் கட்டுண்ட கள்வனே
தாமரை கண்ணனே
கொட்டாய் சப்பாணி
தேவகி சிங்கமே
கொட்டாய் சப்பாணி
பஞ்சமியிலே உதித்த உத்தமியே வருக வருக
தஞ்சமென வந்துன்னையே தொழுதோம்
சஞ்சலமில்லை உன் விழியிலே
அஞ்சலென நின் திருவடி வணங்குகிறோம் தாயே
விண்மண் அளந்தானை
விருந்தாவனத்தில் கண்டோமே
உறிவெண்ணெய் திருடிய கள்வனை
ஆய்ப்பாடியில் கண்டோமே
கோபியர் துயில் எடுத்து
குருந்தையேறிய கண்ணனை
நல்கோ நகரிலே கண்டோமே
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!
ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி
தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"
{{comments.comment}}