டெல்லி: தற்போதைய உலக சூழலில் மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் பதற்றம், மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்தை விதைத்துள்ளது. குறிப்பாக ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அழுத்தம் அதிகரிப்பது, ஈரான் அளித்து வரும் கடுமையான பதிலடி ஆகியவை உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நெருக்கடியான சூழலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீடு ஒரு தீர்வாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் மோடி நினைத்தால் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பலருக்கும் எழுந்து வருகிறது.
ஈரான் மீதான போர் என்பது வெறும் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் அல்ல. அது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை பாதிக்கும் ஒரு காரணி. பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான விவகாரம் இது. ஈரானை தப்புக் கணக்கு போட்டு விட்டதாகவே பலரும் அமெரிக்கா, இஸ்ரேல் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். காரணம், ஈரான் அளித்து வரும் பதிலடி அதிர்ச்சிகரமாக உள்ளது. தனது அக்கம் பக்கத்து நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை கடுமையாக தாக்கித் தகர்த்து வருகிறது ஈரான்.

அத்தோடு யாரெல்லாம் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளார்களோ அவர்களுக்கு கடும் நெருக்கடியையும் இந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் எரிபொருள் சப்ளை பெரும் பாதிப்பை ச ந்திக்க ஆரம்பித்துள்ளது.
இன்னும் முழு அளவிலான போர் மூண்டால் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொடலாம். இது இந்தியாவில் பணவீக்கத்தை அதிகரித்து, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.
ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப் பாதையை ஈரான் முடக்கியுள்ளது. அந்தப் பாதை வழியாகத்தான் உலகின் 25 சதவீத எரிபொருள் விநியோகம் நடந்து வருகிறது. இதனால் பெட்ரோலியப் பொருட்ருகளின் விநியோகம் பெரும் பாதிப்பை சந்திக்க ஆரம்பித்துள்ளது. இது இந்தியாவிற்கான இறக்குமதியையும் கூட பாதிக்க ஆரம்பித்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேலை அமைதிப்படுத்துவது, ஈரானை அமைதிப்படுத்துவது ஆகியவை மட்டுமே இப்போதைக்கு ஒரே தீர்வாக பார்க்கப்படுகிறது. இந்த மூன்று பேரும் அமைதியாகி விட்டாலே போர் நின்று விடும். அதைச் செய்யும் முயற்சியில் எந்த உலக நாடும் ஈடுபடுவதாக தெரியவில்லை. காரணம், மூன்று பேருமே யார் பேச்சையும் கேட்பதில்லை. இந்த இடத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடியை அனைவரும் திரும்பிப் பார்க்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று உலகின் மிக சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோருடன் மோடிக்கு நெருக்கமான நட்பு உள்ளது. அதே சமயம் ஈரானுடன் இந்தியா வரலாற்று ரீதியான மற்றும் வணிக ரீதியான உறவைக் கொண்டுள்ளது.
இது போருக்கான யுகமல்ல என்று ரஷ்ய-உக்ரைன் போரின் போது பிரதமர் மோடி கூறியது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. உண்மையில் ரஷ்யா, உக்ரைனுடன் பிரதமர் மோடி பேசவும் செய்தார். எல்லாமே கூடி வந்த நிலையில் இடையில் அது குழப்பமாகி இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. இந்தியா மட்டும் முழுமையான முறையில் மத்தியஸ்தம் செய்திருந்தால் ஒரு வேளை இந்தப் போர் நிறுத்தப்பட்டிருக்கலாம்.
இப்போது இந்தியா மீதான எதிர்பார்ப்பு ஈரான் விவகாரத்திலும் எழுந்துள்ளது. ஈரான் விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் ஆதரவு யாருக்கு என்பதை பகிரங்கமாக தெரிவிக்கவில்லை. அதேசமயம், அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலை இந்தியா கண்டிக்கவில்லை. மேலும், ஐக்கிய அரபு நாடுகள் மீதான ஈரான் தாக்குதலை இந்தியா கண்டித்துள்ளது. இதிலிருந்தே இந்தியாவின் ஆதரவை நாம் ஊகித்து விட முடியும்.
தற்போதைய விவகாரத்தில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட முயற்சிக்கலாம். இந்தியா தலைமையேற்று உலக நாடுகளை ஒருங்கிணைத்தால், அது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு தார்மீக அழுத்தத்தைக் கொடுக்கும். இந்தியா ஒரு பக்க சார்பின்றி அமைதியை வலியுறுத்துவது, "Global South" எனப்படும் வளரும் நாடுகளை இந்தியாவின் பின்னால் அணிதிரட்ட உதவும். இஸ்ரேலை அமைதிப்படுத்துவது போலவே, ஈரானையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வர இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஒரு புதிய சமநிலை உலக அரசியலில் உருவாகும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை பகிரங்கமாகக் கண்டிப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சில சிக்கல்களை உருவாக்கலாம். ஆனால், மௌனத்தை விட விவாதம் மேலானது என்ற அடிப்படையில், இந்தியா ஒரு மத்தியஸ்தராக செயல்படுவது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை போர்த் திட்டத்தில் இருந்து பின்வாங்கச் செய்யக்கூடும்.
பிரதமர் மோடியின் ராஜதந்திர நகர்வுகள் இந்த போரைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்க முடியும். போர் என்பது அழிவை மட்டுமே தரும் என்பதை உலகிற்கு உணர்த்தி, புதிய உலக அமைதி வரிசையைத் தலைமை தாங்கி நடத்த இந்தியாவிற்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாகும்.
போரினால் ஏற்படும் அபாயங்கள், பாதிப்புகளை நன்கு உணர்ந்த நாடு இந்தியா. ஆயுதத்தால் எந்தத் தீர்வையும் போதிக்க முடியாது என்பதை உலகுக்கு உரத்துக் கூறிய நாடு இந்தியா. மகாத்மா காந்தியின் அமிம்சையை விட சிறந்த ஆயுதம் வேறு இல்லை என்பதையும் அழுத்தமாக பறை சாற்றிய நாடு இந்தியா.
அண்டை நாடான பாகிஸ்தானுடன் பல தசாப்தங்களாக எல்லையில் உரசல்களையும், நேரடிப் போர்களையும் (1947, 1965, 1971, 1999) சந்தித்த நாடு இந்தியா. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா ஆயிரக்கணக்கான வீரர்களையும், பொதுமக்களையும் இழந்துள்ளது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முழு அளவில் போர் மூண்டால், அது போன்ற ஒரு நீண்டகாலப் பதற்றம் அந்தப் பிராந்தியம் முழுவதையும் சீரழிக்கும் என்பதை இந்தியா தனது கசப்பான அனுபவங்கள் மூலம் நன்கு அறியும்.
பாகிஸ்தானுடன் இத்தனை பிரச்சினைகள் இருந்தும், இந்தியா எப்போதும் முதலில் தாக்குவதில்லை என்ற கொள்கையையும், பேச்சுவார்த்தையையுமே முன்னிறுத்துகிறது. இந்த முதிர்ச்சியான அணுகுமுறையை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எடுத்துரைக்கும் தார்மீக உரிமை இந்தியாவிற்கு உண்டு. பாகிஸ்தானுடனான இந்தியாவின் அனுபவம், "ஒரு நாடு தனது வளங்களை போருக்காகச் செலவிட்டால், அதன் வளர்ச்சி எப்படிப் பின்னோக்கிச் செல்லும்" என்பதற்குச் சான்றாக உள்ளது.
ஈரான்-இஸ்ரேல் மோதலில் இந்தியா தலையிடுவது என்பது வெறும் அரசியல் அல்ல; அது பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் முயற்சி. பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளால் இந்தியா சந்திக்கும் 'நிழல் யுத்தங்களை' (மேற்கோள் காட்டி, மத்திய கிழக்கில் அத்தகைய சூழல் உருவாவதைத் தடுக்க பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கலாம்.
"அமைதி என்பது பலவீனமல்ல, அதுவே உண்மையான வலிமை" என்பதை இந்தியா உலகுக்கு நிரூபித்துள்ளது. பாகிஸ்தானுடனான மோதல்களைக் கையாண்ட விதம், இந்தியாவின் பொறுமை மற்றும் ராஜதந்திரத்திற்குச் சான்று. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கையாண்ட சமீபகால நிலைப்பாடுகளால் பாகிஸ்தான் கொட்டம்பெருமளவில் அடங்கியுள்ளது. நமக்கு எதிராக துணிச்சல் பெறும் தைரியத்தை அது இழந்துள்ளது. சர்வதேச அரங்கிலும் அதை இந்தியா தனிமைப்படுத்தி விட்டது.
பயங்கரவாதத்திற்கும் போருக்கும் எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு, இன்று ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரு பாலமாக அமையும். பாகிஸ்தானுடன் பல ஆண்டுகளாக எல்லைப் போர்களையும், பயங்கரவாத ஊடுருவல்களையும் சந்தித்து வரும் இந்தியாவுக்கு, ஒரு போர் உருவாக்கும் சமூக மற்றும் பொருளாதார வடுக்கள் எவ்வளவு ஆழமானவை என்பது தெரியும். அந்த வலியின் அடிப்படையில், பிரதமர் மோடி உலக நாடுகளை ஒருங்கிணைத்து அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானை ஆயுதப் போரை விட்டு விட்டு பேச்சுவார்த்தையில் அமர வைக்க முடியும். அதை சாதிக்கும் தன்மை இப்போதைக்குப் பிரதமர் மோடியிடம் மட்டுமே உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த.. கொண்டாடப்பட்டு வரும்.. தேசிய பாதுகாப்பு தினம்
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மறக்க முடியாத மார்ச் 4.. யார் இந்த அய்யா வைகுண்டர்?
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
மென்மையாக இருந்தாலும் சற்றே பலமாக.. soft yet strong
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
"போன் பண்ணலாமா?.... மெசேஜ் அனுப்பலாமா?".. அவளின் (ல்) அவன் (4)
திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
{{comments.comment}}