கோவிந்தனை கொண்டாடுவோம்.. கோகுலத்தில் விளையாடுவோம்!

Su.tha Arivalagan
Dec 17, 2025,10:37 AM IST

- கோ. அறிவுசெல்வி இராஜாராம்


கோவிந்த ஹரி ஹரி 

கோபால ஹரி ஹரி 

ஆனந்த ஹரி ஹரி 

பத்மா பிரிய ஹரி  

ஸ்ரீ ராம ஹரி ஹரி 

சீதாராம ஹரி ஹரி 

கதி நீயே ஹரி ஹரி 

பரமாத்ம ஹரி ஹரி


கோவிந்தனை கொண்டாடுவோம்! 

கோகுலத்தில் விளையாடுவோம்! 

கோபியருடன் உறவாடுவோம்! 

கோபாலனுடன் பரமபதம் சென்றிடுவோமே! 

கோசலத்தில் தூய்மையாவோம்! 

கோடி ராமநாமம் பாடி 

ராமன்பாதம் பணிந்திடுவோமே!




அமாவாசை இருட்ல

கரண்ட் கட்டுல

என் அன்பின் கட்டுல

என்  கண்ணன் கரியநிற கார்மேகவன்னனே 

கவலைமறையும் நின் மாயையிலே 

மனதும் நிறையும்  கதிர்மதியொளியிலே

அவன் கையில் எடுக்க

குச்சிகள் கூட

குழல் ஆகும்….

அவன் எடுத்துச் சூட

காய்ந்த சருகும்

மயிலிறகு ஆகும்…


இவன் கண்ணன் வேடமிட்டவன்

இவன் கவலைகளை

மறக்கவைப்பவன்

இவன் கோபியரை

கொள்ளைகொண்டவன்

இவன் குழந்தைகளின்

சின்ன கண்ணன்

இவன் காதலுக்கு இனியவன்


கருமைநிற கண்ணனே கண்ணுள்ளே 

பொருமையுடன் வனம் சென்றவனே 

திறமையுடன் இலங்கைச்செற்றவனே  

ஒற்றுமையுடன் அனைவருடன் 

பரமபதம் சென்ற ராமா பல்லாண்டு பல்லாண்டு


நாரணஹரி நவஹரி 

நஞ்சுண்டஹரி நடனஹரி 

நடையில் உயர் நாயகஹரி 

நற்குணஹரி நவரசஹரி 

நலிந்தோர்க்கு நன்மையளிக்கும் ஹரி 

நற்கதியளித்து நம்மை உய்விக்கும் நறுமணஹரி!


கோபியர் மனதை காந்தமென கவர்ந்த

ஒப்பிலாழகு  கண்ணனெனும் கருமாணிக்கம்

ஒப்பிலாப்பன் புள்ளூர்ந்த புருடன்

அழகென்றால் மூவுலகிற்கும் இவனே அழகன்

அழகனும் இவனே அசுரரை மயக்கிய

மாயா அழகியும் இவனே 

மோகினி அவதாரழகிலே அகம் கரையுதே


கண்ணன் கருத்தக்கண்ணன்  

தெய்வத்தின் தெய்வம்

பரமபுருடன் மற்றோர் எல்லாம்

பெண்ணே அல்லவோ

சடகோபனும் கலியனும்  

பெண்ணாகவே பாவித்து கண்ணன்மேல்

தமிழ் மறையாம் பாசுரங்களருளினரே

ஆணில்லை கண்ணன் பெண்ணும் அல்லன் அலியும்

துதிப்பர் மனதில் எதுவோ அதுவே இவன் கல்யாணகுணம்


நற்கவிதை உணர்வினிலே 

நற்காலை மலரிலே 

நற்கதியருளிலே 

நற்புலமை நடுநாயகமே 

நல்கார்த்திகையின் ஹஸ்தத்தில் உதித்த ஹம்சமாக வலம்வரும் வள்ளலே பொலிக பொலிக


ஆடி ஆடி அகம் கரைய 

ஆடும் ஆயர்ப்பாடி ஆயர்தேவே 

ஆண்டாளின் ஆசுகவிக்கு ஆரவாரமாகும் ஆராவமுதே 

ஆநிரைகளுடன் ஆடிடும் ஆதிவராஹனே 

ஆதியும் அந்தமும் உலகம் அளந்தவனே 

ஆழிமழைக்கு அண்ணனே 

ஆகாயகருடனில் ஊரும் நாரணா 

ஆதிஷேபள்ளியணையாய் ஆதியிடரையும் களைந்து ஆட்கொள்ளும் பரமனே!


கருணை மழை பொழிவானே

அரசனாகி மதுராவை ஆண்டுவந்த தேவன்

 பரமனாய் கோகுலத்தில் பாலலீலை காட்டியவன் 

முரசொலிக்க பாண்டவரை முன்னின்று காத்தவன்

கரங்குவித்து தொழுதாலே கருணைமழை பொழிவானே!


யசோதையிடம் வளர்ந்தானே

அழித்தவை மறைந்தன அழகிய ஏழும்எட்டும்

வழிவழி வளர்ந்திட வாய்த்தஇடம் சேர்ந்தனவே 

வழிதந்த யமுனையிடை வசுதேவர் கைமாற்ற       

எழிலான கண்ணனும் எசோதையிடம் வளர்ந்தானே!


நாவினிலே ஹரிநாமம் 

வாழ்வின் வழியறிய புகழ்டன் கூறிடுவோம் 

வசுதேவஹரியென பாசமுடன் அனைத்திடுவான் 

யசோதையின்ஹரியாக கண்டுகளித்திடுவோம் 

அவனின் நீர்மைஹரிநாமமதையே!


பொலிக பொலிக பொலிந்துநின்ற பிரானே 

பொற்கூவியலாம் திருப்பாவை 

மதிநிறைந்த நன்னாள் இந்நாள் 

பொன்னாளில் வேதத்தின் 

வித்தான சத்தைப்பாடி

பறை கொள்வோம் உத்தமனிடமே


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)