வைகறை அழகு.. அந்திபொழுது அழகு.. கறவைகளுடன்.. சேயுமழகு!

Dec 13, 2025,10:37 AM IST

- கோ. அறிவுசெல்வி இராஜாராம்


உன்னைப் போல யார் உத்தமன்

உருகும் மெழுகாய் கண்ணனுடன்

உயிரில் கலந்த உறவாய் அமுதன்

உண்மை அன்பில் கேசவன்

உள்ளம் தன்னில் சுமந்த சுந்தரன் நீ

உதிரம் பாலாய் ஊட்டிய யசோதை இளஞ்சிங்கமே

உதரம் ஏந்திய உத்தமி தேவகிமகனே

உந்திக் கொடியின் முடிவே முகுந்தா பல்லாண்டு பல்லாண்டு


அதரம் அழகு

சிந்தனை அழகு

பவள

செந்தமிழ்

மதுரம் மதுரம்

வைகறை அழகு

அந்திபொழுது அழகு

கறவைகளுடன்

சேயுமழகு 

குடகுக் கடலில்

கறையும் பகலவன் அழகு அழகுடன் செந்தமிழே அழகு




ஞாளியாய் நான் பிறந்திடினும்

நாரணா உன் சந்நிதிமுன் 

விடாது திரிந்தலைந்து 

உன்பக்தர் அடிபதித்த தூய்மையான இடம்புரண்டு 

தந்நிகரில்லா புகழெய்தி பகைவனான 

தீவினையகன்று நெருங்கி உனையே அடைவேனே!


நின்னபய திருவடியிருக்க 

எனை தாபம் அண்டுமோ! 

நின் கமல கரமிருக்க 

எனைத்துன்பம் தீண்டுவதோ!

என் வாழ்வே 

உன் திருவடியிலே 

இன்விழி அரங்கா!

சேயென்ன நோக்கிடுவாயே!


ஆண்டாள் குழந்தை  

செவிமடுத்து கதை கேட்டவள்

ஶ்ரீ ரங்கத்து நாயகனை

தனக்கென்று காயத்தில்

சேர்த்த வள்!

கணவனை கடவுளாய்

பார்த்த பெண் இனம்

அந்த-கடவுளையே

கணவனாய் பார்த்தது

இவள் மனம்!

பெண் யென்றால்

பேயும் யிறங்கும்

பேச்சுக்கு...

ஆனால் -அந்த

பெருமாளு(னு)ம்

இறங்கினார் அவ

மூச்சுக்கு! வருக வருக 

இரங்கராஜனுடன் திவயதம்பதிகளாகவே


நாளும் நாரணஹரி 

எனையாளும் ஏகாந்தஹரி 

உனையாளும் உத்தமஹரி 

தனையாளும் தரணிஹரி 

புவியாளும் புன்னகைஹரி 

நாடாளும் நரநாரணஹரி

வந்தாளும் வருணஹரி

பண்பாடும் பரந்தாமஹரி


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்

news

ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு

news

மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி

news

தாடி பாலாஜி.. Nooo.. இனி பொதுச் செயலாளர் பாலாஜி.. புதுச்சேரியில் அடித்த லக்கி பிரைஸ்!

news

டிங்டாங் டாங் டிங்டாங்.. இரண்டும் ஒன்றோடு ஒன்று.. அது ஏன் நிமிஷத்துக்கு 60 விநாடி?

news

தங்கம் விலை இன்று சற்று குறைந்தது ... வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.400 நோக்கி உயர்வு!

news

பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

news

அன்னைக்கு நிகர் ஏதுமில்லை!

அதிகம் பார்க்கும் செய்திகள்