அரங்கன் யாவுமே அறிந்தவனே!

Dec 12, 2025,12:21 PM IST

- கோ. அறிவுசெல்வி இராஜாராம்


பரத்வஹரி 

பவ்யஹரி 

பவித்ரஹரி.

பவனஹரி 

பகவான்ஹரி 

பலதேவஹரி 

பக்தர்களை 

பரவசவமாக்கும்ஹரி 

பக்ஷ்னஹரி 

பக்கம் வந்து அருளும்ஹரி




வயல்வெளி 

வாழ்வே வளம்தானே

பரமபதமுமே

தோற்றுபோகுமே

தென்றலென மேனியிலே தொடும்போது

ஊடவே வரப்புநீரே

கலந்துவந்து

பாதமதிலே தோகையென புல்வெளியிலே 

புளங்காங்கிதமே அடைந்திடுவோமே!


அரங்கன் யாவுமே அறிந்தவனே!

அவன் அவயங்களில்  மயங்குதே

அணிகளின் ஆபரண அழகிலே

அடடா பட்டெனப் பகிர்ந்திடுவேன்

அரங்கன் கண்டு நகைத்திடுவான்

அம்பாரி களிறுடன் ரசித்திடுவேன்

அந்தியில் கருடன் வியந்திடுவேன்

அக்கார வடிசலைக் சுவைத்திடவே

அரங்கன் அள்ளிக் வழங்குவான்..


அருகதையே அற்றயென்னை 

ஆதரித்து அருளிவிட்டான்

அலைபாயும் மனதினிலே 

ஆலயமும் அமைத்துவிட்டான்

அவனுடைய கருணையினால் 

அற்புதங்கள் செய்துவிட்டான்

அவனியிலே எந்தனுக்கும்

நல்லிடத்தைத் தந்துவிட்டான்

அனுதினமும் உன் நினைவையே 

ஊன்றிவிடு அகமதிலே!


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்