எங்கள் தெருவிலும் பிள்ளையார்.. அழகிய சிங்கரின் என்பா

Su.tha Arivalagan
Sep 19, 2026,04:20 PM IST

சுவற்றுப் பிறையில் 'சிவனே' என்று

தெருக் குத்து பிள்ளையார் சன்னதி;

மேற்கு பார்த்து அமர்ந்திருப்பது சிறப்பு!

எங்கள் தெருவிலும் பிள்ளையார்


வாசல்  கூட்டி  சுத்தம் செய்து,

நீர் தெளித்து  மலர் பூசனை

செய்யும் செங்கலமத்தின் அருளால் வாழ்கிறார்!

எங்கள் தெருவிலும் பிள்ளையார்.




பால் அபிஷேகம்,

பஞ்சாமிர்த அபிஷேகம்,

தேன் அபிஷேகம்

இளநீர் அபிஷேகம்

குளிர்ந்து போய் எமக்கு அருளும்,

எங்கள் தெருவிலும் பிள்ளையார்.


தேங்காய் கொழுக்கட்டை, 

பால் கொழுக்கட்டை, 

எள்ளு கொழுக்கட்டை,

உளுந்து கொழுக்கட்டை

பலதும் படைக்க; புன்னகையில் பூரிக்கிறார். 

எங்கள் தெருவிலும் பிள்ளையார்.


செம்பட்டு  உடுத்தி,

முப்புரி நூலணிந்து,

கற்பூரம் ஏற்றி

நெய் விளக்கு  

சுடர் ஒளியில், அற்புதமாக ஒளிர்கிறார்.

எங்கள் தெருவிலும் பிள்ளையார்.