தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
- ஸ்வர்ணலட்சுமி
தீபாவளி பண்டிகை வந்து விட்டது.. அதன் பெயர்க் காரணம் மற்றும் பாதுகாப்பான தீபாவளி எப்படி கொண்டாடலாம் என்பதை பற்றிய சிறு தகவல்கள்..
விசுவாச வருடம் 2025 அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி திங்கட்கிழமை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் குதூகலமாக மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளி பண்டிகை.
பெயர் காரணம்: தீபாவளி என்பது தீபம் + ஆவளி என்று பிரித்து எழுதலாம். இதற்கு தீபங்களின் வரிசை அல்லது விளக்குகளின் வரிசை என்று பொருள். இந்தப் பண்டிகை இருளை நீக்கி ஒளியை கொண்டு வரும் பண்டிகை ஆகும். வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை வழக்கமாக ஐந்து நாட்கள் நீடிக்கும்.
இதில் அக்டோபர் 18ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தன் தேராஸ்,சோட்டி, தீபாவளி, கோவர்தன் பூஜை மற்றும் பாய் தூஜ் ஆகிய பண்டிகைகள் அடங்கும். வண்ணமயமான புத்தாடைகள், பட்டாசு, இனிப்புகள், விருந்து மற்றும் பரிசுகளுடன் குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடி கொண்டாடும் பெரும் பண்டிகை ஆகும்.
அமாவாசை திதி அக்டோபர் 20ஆம் தேதி தேதி பிற்பகல் 3:44 மணிக்கு தொடங்கி அக்டோபர் 21ஆம் தேதி மாலை 5 :54 மணி வரை உள்ளது. தீபாவளி - இருளை அகற்றி ஒளியை குறிக்கிறது. இந்து புராணங்களின்படி தீபாவளி என்பது தீமையை அழித்து நன்மை பிறக்கும் நன்னாளாகும்.
முக்கிய கதைகள் மற்றும் காரணங்கள்:
ராமாயணத்தில் ராமபிரான் தனது 14 வருட வனவாசத்தை முடித்து ராவணனை கொன்று, சீதை மற்றும் லட்சுமணனுடன் அயோதிக்கு திரும்பிய நாளில் மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
நரகாசுரன் வதம் :ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரன் என்ற அரக்கனை அழித்து,அவன் சிறை பிடித்து பெண்களை விடுவித்தார், இந்த நன்னாளில் நன்மையின் வெற்றியாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து,லக்ஷ்மி பூஜை செய்து,பட்டாசுகள் வெடித்து,இனிப்புகள் பரிமாறி, விருந்து உண்டு, வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று குதூகலமாக தீபாவளியை கொண்டாடி மகிழலாம்.
தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்கும் பொழுது ( Safety tips )பாதுகாப்பாக எப்படி? இருக்கலாம் பார்ப்போமா...
1. குழந்தைகளே... பட்டாசு வெடிக்கும் பொழுது பெரியவர்களுடன் வெடிக்கவும்.
2. வெடிக்கும் பட்டாசுகளை கையில் ஏந்தா தீர்கள்.
3. முகத்தை அருகில் வைத்து பட்டாசு வெடிக்க கூடாது.
4. முக்கியமாக வெடிக்கும் பட்டாசுடன் செல்ஃபி எடுக்கக் கூடாது.
5. பருத்தி ஆடைகள் உடுத்தி,கால்களில் செருப்பு அணிந்து வெடிக்கவும்.
6. சானி டைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்க வேண்டாம் . கை கழுவ சோப் பயன்படுத்தவும்.
7. நீளமான ஊதுபத்திகளை பயன்படுத்தி வெடிகளை வெடிக்கவும்.
8. முதலுதவி பெட்டி அருகில் வைத்து கொள்ளவும்.
9. வாலியில் தண்ணீர் மற்றும் மணல் நிரப்பி எரிந்த கம்பி மத்தாப்புகளை அதனுள் போடவும்.
10. வெடிக்கும் வெடிகளை கையில் வைத்து வெடிக்க வேண்டாம். இவ்வாறு பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம்.
மேலும் இன்று திருமண நாள் மற்றும் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.