- ஸ்வர்ணலட்சுமி
தீபாவளிக்கு ஸ்வீட்ஸ் செஞ்சா மட்டும் போதுமா.. சுறுசுறுன்னு மொறு மொறுப்பா காரமும் பண்ணனும் இல்லையா.. அதுக்காகத்தான் ஒரு சூப்பரான ரெசிப்பியுடன் வந்துள்ளோம்.
இட்லி அரிசி வைத்து பூண்டு ஓமம் ஓட்டு பக்கடா செய்வோம் வாருங்கள்
பூண்டு ஓமம் ஓட்டு பக்கடா:
1.இட்லி அரிசி - 3 டம்ளர்
2. வறுகடலை- (பொட்டுக்கடலை) 2 டம்ளர்.
3. பூண்டு,வரமிளகாய்- தலா 10. (காரம் தேவைக்கு ஏற்ப )
4. ஓமம், எள்ளு தலா ஒரு ஸ்பூன்.
5. கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் - 1 லிட்டர். (குறிப்பு : செக்கு எண்ணெய் பயன்படுத்தினால் மிகவும் ருசியாக இருக்கும்.)
செய்முறை:

1.இட்லி அரிசியை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பிறகு அதனை கிரைண்டரில் நைசாக ஆட்டவும்.
3. வறுகடலை (பொட்டுக்கடலை) மிக்ஸியில் நன்றாக அரைத்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும். இட்லி அரிசி மாவில் சேர்க்கவும்.
4. பூண்டு வர மிளகாய் மிக்ஸியில் நன்றாக அரைத்து அந்தச் சாறை மாவில் சேர்க்கவும்.
5. உப்பு தேவைக்கு ஏற்ப சேர்க்கவும்.
6. ஓமம் எள்ளு தலா ஒரு ஸ்பூன் சேர்க்கவும்.
7. ஒரு குழி கரண்டி எண்ணெயை நன்றாக காய வைத்து மாவில் ஊற்றவும்.
8. இவை அனைத்தையும் நன்றாக பிசையவும்.
9. அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு ஏறி காய்ந்ததும்,
10. முறுக்கு அச்சில் போட்டு மாவை சிறிது சிறிதாக பிழிந்து பக்கடாவை எண்ணெயில் பொரித்தெடுக்கவும் .
11. சூடு ஆறிய பிறகு காற்று புகாத ஒரு ஸ்டீல் டப்பாவில் வைக்கவும்.
12. மொறு மொறு என்று சூப்பர் கிரிஸ்பியான பூண்டு ஓட்டுபக்கடா ரெடி.
13. . இந்த தீபாவளிக்கு ஒரு ஸ்வீட் &காரம் ரெடி. எவ்வளவுதான் கடைகளில் வாங்கினாலும் நாம் வீட்டில் செய்வது தனி ருசி தான். நமக்கும் மிகவும் சந்தோஷம் அளிக்கும்.
14. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இது போன்ற ருசியான சமையல் குறிப்புகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}