- ஸ்வர்ணலட்சுமி
தீபாவளி என்றாலே ஸ்வீட் தான் அனைவரின் நினைவிலும் வரும். சட்டென நான்கு பொருட்கள் வைத்து ஒரு ஸ்வீட் - காஜு கத்திலி. முந்திரிப் பருப்பை வைத்து செய்யலாம்.வாருங்கள்.
கிச்சனுக்குள் போகலாம் பிரண்ட்ஸ்..!
தேவையான பொருட்கள்:
1.முந்திரிப் பருப்பு - 2 கப்
2. சர்க்கரை - 1 கப்
3. பால் பவுடர் -1/2 கப்
4. ஏலக்காய் -2
5. தண்ணீர் அரை கப்
செய்முறை:

1. முதலில் முந்திரியை நன்றாக துடைத்து விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போடவும், அதனுடன் அரை கப் (மில்க் பவுடர்) பால் பவுடர், ஏலக்காய் இரண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
2. அரைத்த பவுடரை சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
3. பிறகு ஒரு அடி கனமான வாணலியில் ஒரு கப் சர்க்கரை போடவும்.
4. அரை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கம்பி பதம் வரும் வரை சர்க்கரை பாகு காய்ச்சவும்.
5. பிறகு அடுப்பை சிமிலியே இருக்குமாறு வைக்கவும்.
6. சலித்து வைத்த முந்திரி பால் பவுடர் கலவையை இதனுள் சேர்த்து நன்றாக கிளறவும்.
7. இது நன்றாக உருண்டு திரண்டு வரும். சப்பாத்தி மாவு போல் திரண்டு வரும். உடனே அடுப்பை அணைக்கவும்.
8. ஒரு பாலிதீன் கவரில் இதனைப் போட்டு நன்றாக உருட்டவும்.
9. பாலித்தீன் கவரில் மாவை வைத்து அதன் மேல் மற்றொரு பாலத்தின் கவர் வைக்கவும்.. பிறகு சப்பாத்தி கட்டையால் இதனை மெல்லியதாக தேய்க்கவும்.
10. மேலுள்ள கவரை எடுத்து நமக்கு தேவையான அளவு கத்தியால் டைமண்ட் அல்லது சதுர வடிவத்தில் கட் செய்யவும்.
11. சிறிது நேரம் சூடு ஆறவிடவும்.
12. சூப்பரான அனைவருக்கும் பிடித்தமான காஜுகத்திலி ரெடி.
13. தீபாவளிக்கு சீக்கிரமாக இந்த காஜு கத்திலி செய்யலாம் இல்லையா?....
தீபாவளிக்கு காஜு கத்திலி செய்து அசத்துங்க ஃபிரண்ட்ஸ்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}