- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
தேசிய பீதி தினமா?
பீதி கொள்ளாத மனம் எதையும் வெல்லும் என்பதை உணர்த்தும் இன்றைய தினத்தை தெரிந்து கொள்வோம். தேசிய பீதி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 9 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் பீதியை (panic) பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.
பீதி என்பது திடீரென ஏற்படும் அதிகமான பயம் அல்லது பதட்டம் ஆகும். சிலர் பீதி தாக்கம் (Panic Attack) காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டும் காணப்படுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவள் வரை மன நலம் பாதிக்கப்பட்டு இருப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது.
இங்கே குறைபாட்டினை போக்குவதற்காகவும்,மனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மனஅழுத்தம் மற்றும் பயம் மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. பீதியை சமாளிக்க மன உறுதி அவசியம் தேவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
யோகா மற்றும் தியானம் பீதியை குறைக்க உதவுகிறது. உடற்பயிற்சி மனநலத்தை மேம்படுத்துகிறது. நல்ல உறக்கம் மன அமைதிக்கு முக்கியமானதாக அமைகிறது .

ஒருவர் நன்றாக எட்டு மணி நேரம் தூங்க தூங்க வேண்டும். தூக்கம் என்பது ஆழ்ந்த தூக்கமாக இருக்க வேண்டும்.
சரியான தூக்க நேரம் அமைய வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் விழித்திருக்கக் கூடாது. காலை 6மணிக்கு மேல் கட்டாயம் தூங்க கூடாது.
நிறைய நபர்கள் இரவில் அதிக நேரம் கண் விழித்துக் கொண்டு டிவி, கைப்பேசி போன்றவற்றை பார்த்து
பார்த்துவிட்டு 12 மணிக்கு மேல் தூங்கி காலை 8 மணிக்கு மேல் எழுந்திருப்பது மிகவும் தவறான பழக்கமாகும்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவது மனநிலையை சீராக்கும் என்பதை உணர வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். கைப்பேசியிலே பேசிக் கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும் .
நம்மை சார்ந்தவர்களுக்கு மனநலம் சார்ந்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுப்பது நல்லது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்களையும் விழிப்புணர்வு அடைய செய்ய வேண்டும்.
பீதியால் பாதிக்கப்பட்டவர்களை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கை பிரகாசமாக அமைவதற்கு
நாம் அனைவரும் அவர்களுக்கு ஆதரவு மற்றும் ஊக்கம் அளிக்க வேண்டும்.
உடல் நலம் பாதிக்கப்பட்டால் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் சரியாகும். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சரியான ஆலோசனைகள் வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும். உடல் நலத்தை விட மனநலம் மிக முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நாம் அனைவரும் பீதி அடையாமல் மகிழ்வாக வாழ்வோம் . மன அழுத்தமில்லா வாழ்க்கை வாழ அனைவரும் முயற்சி செய்வோம். பீதி கொள்ளும் போது மூச்சு விடு, யோசி, செயல்படு". என்பதை சிந்தித்து செயல்படுவோம்.
"நிலைமை கடினமாக இருந்தாலும், பதற்றத்தைத் தவிர்த்து அமைதியாய் இருப்பது புத்திசாலித்தனம்" என்பதை உணர்ந்து செயல்படுவோம். பதற்றமான சூழ்நிலைகளில் அமைதி காப்பதே சிறந்த முடிவுகளைத் தரும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
சமூகத்தில் மனநலம் பற்றி சிறப்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது அனைவரின் கடமையாகும்
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}