சன்னலோரம் எனது ஈரக் கண்களை இயல்பாய் சுழற்றினேன்!
- வே.ர. விஜயலட்சுமி
பார்த்தவுடன் அடைந்தேன் பரவசம்....
கண்டவுடன் கொண்டேன் களிப்பு...
பட்டம் படித்த நான் ஆனேன் பள்ளிக்கூட மாணவனாய்!!!!
எனது பட்டம் வானில் சிறகடித்துப் பறப்பது போல் நானும் பறந்தேன் உச்சி வானிலே!!!!!
பறக்கப்பறக்கப் பேரின்பம்.... பட்டாம்பூச்சிகள் பறந்தன என் இதயத்தில்
அவள் என்னை ஏறெடுத்துப் பார்த்தபோது!!!!
உத்தமனாய் நேற்று வரை நீதி பேசிய நான்
இன்று முதல் அவளைத் திருட்டுத்தனமாய்ப் பார்த்து ரசிப்பதிலே கள்வன் ஆனேன்...
பிறர் அவளைக் கொண்டாடிட பெருமை கொண்டேன்..
அவளிடம் நட்பு நாடியவர்களை நயவஞ்சகமாய் நகர்த்தினேன்,...
அசட்டுச்சிரிப்பு அழுத்தமாய் வந்து ஒட்டிக்கொண்டது என் உதடுகளில்....
சிதறிப்போனது என் சிந்தனை!!!!
தடம் மாறிப்போனது எனது வாழ்வு!!!!
அவள் நினைவிலே மூழ்கித் திளைத்து தொலைத்த தென்னவோ எனது வாழ்வையே!!!
சீரிய சிந்தனைகளோடு வகுப்பறை முதல் மாணவணாய்த் வளைய வந்த நான்
கடைசி மதிப்பெண் பெற்று வீதி உலா வருகின்றேன்...
தென்றலென என்னை வருடிய தேவதையை
சொந்தமாக்கிக் கொள்ள முயன்றதிலே மூச்சிழந்து பேச்சிழந்து
கோமா நிலைக்குச் சென்று உருக்குலைந்து போய் விட்டேன்!!!!!
அவள் நினைவுகள் மட்டும் பசுமையாய் என் நெஞ்சத்தில்!!!!!
மருத்துவமனை சன்னலோரம்
எனது ஈரக் கண்களை இயல்பாய் சுழற்றினேன்!!!!
என்ன அதிசயம்!!!!
அவளா இவள்?
மூன்று குழந்தைகளை முன்னே செல்லவிட்டு
தன் வாழ்க்கைத் துணையுடன் கைகள் கோர்த்து
ஆனந்தமாய் அன்பு காட்டி
அணைத்துக் கொண்டு குடும்ப அரவணைப்பில் குதூகலிக்கும்
எனது கண்கள் செருகியது...மனமும் தான்!!!!
கோமா என்னைக் கோபமாய்த் தத்தெடுத்துக் கொண்டது!
(V.R. Vijayalakshmi ,graduate teacher for ENGLISH,CW Group, Kanchipuram)