- பா.பானுமதி
கோவிலில் கண்டதும் எனை
கொக்கி போட்டு இழுத்தவள்
வாயிலில் நின்று வசீகரித்து சென்றவள்
வங்கியில் கண்டபோது வளைத்துப் போட்டவள்
நெஞ்சில் தங்கி இளைக்கச் செய்தவள்
திருவிழாவில் இருந்து திருடி போனவள்
தினம் விழா வாக்கி வருடி சென்றவள்
தொலைவில் இருந்தும் என்னை துளைத்து போட்டவள்
அருகில் இருந்து என்னை அசைத்து விட்டவள்
பொது இடத்தில் பொறுமை இழக்க செய்தவள்
தனிமையில் இருக்கையில் தள்ளாட விட்டவள்
அன்று ஒரு நாள் என்னை அள்ளிச் சென்றவள்
பிறிது ஒரு நாள் என்னை பிரித்துப் போட்டவள்
கண்ட நாள் முதல் என் கண்ணில் கலந்து விட்டவள்

இந்த நாள் வரை இதயத்தில் வாழ்ந்து வருபவள்
அழகின் வடிவாய் அசைந்து வருபவள்
அமைதியின் இலக்கணத்தை இசைத்துக் கொண்டிருப்பவள்
காண்பவரை எல்லாம் கட்டி போடுபவள்
உள்ளிருந்து என்னில் உறவாடிக் கொண்டிருப்பவள்
இன்று கண்முன்னே நடமாடிக் கொண்டிருப்பவள்
அவளா இவள்
இதயத்தில் இருந்து இமை வழியில் வெளிவந்து விட்டாளா
தேடுதல் தெரிந்து என்னை திருப்திபடுத்த வந்து விட்டாளா...
உயிர் காக்கும் அமுதமா உணர்வில் பொங்கும் குமுதமா....!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!
ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!
எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்
சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!
கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்
குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
{{comments.comment}}