- ரதி தேவி
தான் பெற்றெடுத்த ஐந்து குழந்தைகளின் நலனுக்காகவே உயிருடன் இருந்தாள். நாம்தான் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள முடியவில்லை, தன் குழந்தைகளாவது நல்ல படித்து முன்னேற வேண்டும் என்று மட்டுமே நினைத்தாள். அல்லும் பகலும் வயக்காட்டில் தன் உயிரைக் கொடுத்து வேலை செய்தாள்.
ஆம்... அவளின் பெற்றோர்களோ 1960-களில் நல்ல வசதியானவர்கள். அந்த காலத்தில் தொலைக்காட்சி இடம் பிடித்த வீடு அவளின் வீடு. நன்றாகவே படித்தாள். ஆனால் காதல் என்ற வலையில் சிக்கி, நினைத்தவனை கரம் பிடிக்க பெற்றோர்களிடம் மன்றாடினாள்.
அவளின் பெற்றோர்கள் வேண்டா வெறுப்பாக, அவளின் விருப்பப்படி சீர்வரிசைகள் செய்து திருமணம் முடித்து வைத்தனர்.
அவளின் வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. குழந்தைகள் வளர வளர வீட்டுக்காரனின் கொடுமை தாங்க முடியவில்லை. நாளுக்கு நாள் குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்தினான். ஐந்து குழந்தைகளும் செய்வது அறியாமல் திகைத்தனர்.

முதலாவது பையன் நன்றாகவே படித்தான். பிளஸ் 2-வில் நல்ல மார்க் எடுத்து காலேஜ்-ல் சேர்ந்து படித்து கொண்டு இருந்தான். இரண்டாவது படிக்கப் போகவே விருப்பம் இல்லாமல் பெற்றோருடன் வயக்காட்டு வேலை பார்த்தாள்.
மூன்றாவது பெண் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தாள். நன்றாகவே படித்தாள். நான்காவது பையன் ஏதோ பள்ளிக்கு போவான் வருவான். சுமாராகவே படித்தான். ஐந்தாவது பெண் குழந்தை மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தாள். இப்படியாக அவளின் ஐந்து குழந்தைகளும் அம்மாவின் நிழலில் போன்று வளர்ந்து கொண்டு இருந்தார்கள்.
ஆனால் கணவனின் கொடுமையோ நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அவளை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்தான். ஆனாலும் அவள் தன் அம்மாவின் வீடு அருகிலேயே இருந்தாலும் செல்லவில்லை. காரணம், கல்யாணம் முடித்த கையோடு அவளின் அப்பாவுடன்
உறவு இல்லை. அவளும் வைராக்கியத்துடன் அப்பா வீட்டுக்கு செல்லவில்லை. அவளின் குழந்தைகள் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
அவளின் கணவன் குடிகாரனாக இருந்தாலும் அயராத உழைப்பாளி. அவனின் முன்னேற்றத்தைக் கண்டு அவனின் சொந்தக்காரர்கள் பொறாமைப்பட்டு அவனுக்கும் குடும்பத்துக்கும் சின்ன சின்ன இடைஞ்சல்கள் கொடுத்தனர்.
அதையெல்லாம் தகர்த்து எறிந்தனர் அவர்களின் உழைப்பினால். குழந்தைகள் வளர வளர அவளின் கணவர் கொஞ்சம் கொஞ்சமாக சண்டைப் போடுவதை நிறுத்தி விட்டார்.
இப்படியாக ஒரு வழியாக அவளின் குடும்பம் நல்ல நிலையில் இருந்து வந்தது. ஆனாலும் அவள் மட்டும் தன் சுதந்திரம், சந்தோஷம், ஆசைகள் என எதையும் நினைக்கவில்லை. அப்போதும் குழந்தைகளுக்காகவே வாழ்ந்தாள்.
மூன்று குழந்தைகளுக்கு திருமணம் முடிந்தது. ஒருவன் வெளிநாட்டில் இருந்து வேலை பார்த்தான். கடைசியாக படித்த பெண் காலேஜ் படித்துக் கொண்டு இருந்தாள்.
நன்றாகப் போய்க் கொண்டு இருந்த அவளின் வாழ்க்கையில் இடி விழுந்தது போல், கிராமத் திருவிழாவில் நடைபெற்ற சண்டையினால் ஏற்பட்ட தகராறினால், செய்யாத தவறுக்காக சில பிரச்சினைகளைச் சந்தித்தது அவளின் குடும்பம். பிரச்சினையின் விபரீதப் பிரச்சினைகளால் அவரின் வீடு சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டது. கட்டிய சேலையுடன் வீட்டை விட்டு, ஊரை விட்டே துரத்தப்பட்டாள். வெளியூர் வந்தாள்.
அவள் அதே வைராக்கியத்துடன் தம் இரண்டு குழந்தைகளின் நலனுக்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வயக்காட்டு வேலைக்கு சென்றாள்.
கஷ்டப்பட்டு அவளும் அவளின் கணவனும் கடைசி மகளை கல்யாணம் முடித்து வைத்தனர். பின் நான்காவது பையனுக்கும் கல்யாணம் முடித்து வைத்து அழகு பார்த்தனர். பேரன் பேத்திகளைப் பார்த்து சந்தோஷமாக இருந்தாள்.
ஆனால் அவளின் உடல் ஒத்துழைக்கவில்லை. ஓய்வே இல்லாமல் உழைத்த அவளின் உடல் ஆரோக்கியத்தை இழந்திருந்தது.
உடலும் மனமும் கஷ்டத்தை உணர்ந்த அவள், ஒரு நாள் எதிர்பாராத விதமாக அவளின் உயிர் இவ்வுலகை விட்டு நீங்கியது.
இறப்பிலும் யாருக்கும் கஷ்டத்தைக் கொடுக்கவில்லை. அவளின் மறுபக்கத்தை அனுபவிக்காமலேயே இவ்வுலகை விட்டு நீங்கினாள்.
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
மனிதன் எப்போது மாமனிதன் ஆகிறான்?
PUNCTUATE YOUR PUNCTUALITY!
Social media & it's impact
தப்பாக நினைப்பார்கள்!!!
{{comments.comment}}