சென்னை : உள்ளாட்சி தேர்தலில் வென்றால், தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக மாவட்ட வாரியமாக அதிமுக கட்சி நிர்வாகிகளை அழைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக பெற்ற தோல்வி, கட்சியின் அடுத்த கட்ட நகர்வு, கட்சியை வலுப்படுத்துவது, வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது உள்ளிட்டவை குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் சிலர், அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுக.,வில் இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தற்போது நடைபெற்று வரும் தவெக அரசு 5 வருடங்கள் முழுவதுமாக நீடிக்காது. எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழும் நிலை தான் உள்ளது. கவர்ச்சிகளை நம்பி மக்கள் தவறுதலாக ஓட்டளித்து விட்டனர். அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் உண்மையான விசுவாசிகளுக்கே சீட் தர பரிந்துரை செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் மீண்டும் நாம் ஆட்சியை பிடித்து விடலாம் என தெரிவித்துள்ளார்.
இதுவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே, தவெக அரசு தவிர்ந்து விடும். எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தேர்தல் வரலாம் என கட்சி தொண்டர்களிடையே பேசி வந்தார். ஆனால் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தவெக அரசு கவிழும் என சொல்லி உள்ளார். அதோடு, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என அவர் சொல்லி உள்ளதன் அர்த்தம் என்ன? அதிமுக என்ன பிளானில் உள்ளது? என பலரும் கேட்க துவங்கி உள்ளனர்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடிக்கலாம் என்று அவர் சொல்லி இருந்தால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர் உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம் என்கிறாரே அது எப்படி? என பலரும் கேட்டு வருகின்றனர். அப்படியே இடைத்தேர்தலில் வென்றால் என அவர் கூறி இருந்தால் கூட, 7 தொகுதிகளுக்கு தான் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆனால் அதிமுக ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு கிட்டதட்ட 70 முதல் 75 இடங்கள் தேவை. அப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் இவர் இந்த கருத்தை தெரிவித்திருப்பார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
உதவியை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்!
"அன்னை மொழி அதுவே நம் விழி"
Motivational Short Story: சிற்றுயிர்களின் விழிப்புணர்வு மாநாடு
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
Short Story: ருத்ர தாண்டவம்!
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
70 வயதிற்கு மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி கிடையாது: திமுக தலைமை அதிரடி
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
{{comments.comment}}