மரம் போல் உயரட்டும் மனித இனம்!

Su.tha Arivalagan
Nov 03, 2025,10:08 AM IST

- யோகா பேராசிரியை மு.மஞ்சரி‌


மரத்திற்கோ ஓர் அறிவு. 

மனிதனுக்கோ ஆறறிவு. 

மரம்போல் உயர்ந்த அளவிற்கு, மனிதன் உயரவில்லை

உயரத்தை விட்டு விடுங்கள் உள்ளத்தால், உயரலாமே. 


மரம் வளர்ந்து, நிற்கும்போது, நில அரிப்பை தடுக்கும்.

நீர் வளத்தை பெருக்கும். 

காற்றின் மாசை குறைக்கும். 

மண்ணை மழையால் காக்கும். 

உழைப்போர்க்கு நிழலை தரும். 

பசித்தோர்க்கு, பழத்தை கொடுக்கும் .




ஓசோன் படலம் கிழிவதை, தடுக்கும்

புவி வெப்பத்தை குறைக்கும்

ஒவ்வொரு மரமும், ஒரு தொழில் கூடம். 

கரியமில வாயுவை, உட்கொள்ளும். 

சுவைக்கும். பிராணவாயுவை

வெளித்தள்ளும் புறம் தள்ளும்

உயிரின வாழ்விற்கு, மூச்சுக்காற்றாகும்.


மரம் வெட்டப்பட்டு, மரக்கட்டையாகும் போது கட்டில் ஆகும். 

குழந்தைக்கு தொட்டில் ஆகும். 

வீட்டுக்கு கதவாகும். 

வாசல் நிலையாகும். 

கோயில் தேராகும். 

கருவறையில் கடவுளாகும். 

இன்னும் என்னென்னவோ ஆகும்.


ஆனால் ஒவ்வொன்றும் என்றைக்கும் பல பயனளிக்கும். 

மரம் உயர்ந்த அளவிற்கு, மனிதன் உயரட்டும்.

உயரத்தை விட்டு விடுங்கள், உள்ளத்தால் உயரட்டும்.