- மலர்விழி ராஜா
சாலையின் ஒரமது......!
சாய்ந்து விழ.....
காத்திருக்கும் மண் சுவரு.......!!!
சல்லடையை கவிழ்த்தது போல்.....
சரிந்து நிற்கும் மேற்கூரை....!!
உடைந்து கிடக்கும் பாத்திரங்கள்......!
அங்கொன்றும்....! இங்கொன்றும்....!
அடுப்பெரிய விறகின்றி.......!
அடுத்த வேளை உணவின்றி......!
கிழிந்து தொங்கும் உடையினிலே......!
மீண்டும் மீண்டும் பின்னலிட்டு......!!
மாற்று உடை ஏதுமின்றி......!
பாடசாலை செல்ல வழியுமின்றி......!
பரிதவித்து ஏங்கி நின்றாள்....!
பாவம் அந்த சிறுமி அவள்.....!!
கண்களிலோ நீர் துளிகள்....!
அடுக்களையில்....
அரிசியில்லை.......!!
அன்னையின் உடலோ நலனுமில்லை....!
ஆதரிக்க யாருமின்றி.....
ஆகாயத்தை பார்த்து நின்றாள்....!!
அங்கேயும் அவசரமாய்....
மழை மேகம்.....!!
கொட்டி தீர்த்த மழையினிலே.....!
கரம் குவித்து
குளிரினிலே கண் மூடி நடுங்கி நின்றாள்.....!!
நிற்கின்ற காட்சி அது.... "போதுமடா சாமி என்று"!!!
வறுமை மிக கொடுமை....!
கொடுமையிலும்
கொடுமை...
இளமையில் வறுமை....!!
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
ஐங்கரன் (நெடுங்கதை)
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
{{comments.comment}}