Bread Halwa .. வீட்டில் பிரெட் இருக்கா.. எடுத்துட்டு வாங்க.. ஸ்வீட்டா ஹல்வா பண்ணுவோம்!

Su.tha Arivalagan
Mar 18, 2026,03:12 PM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


வீட்டில் பிரெட் இருக்கா? அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிச்சிட்டு இருக்கீங்களா? தினமும் பிரெட் ஜாம், சாண்ட்விச் தான் செய்து சலிச்சுட்டீங்களா? அப்படின்னா, அதே பிரெட்டை வைத்து ஒரு சூப்பரான, சீக்கிரமா செய்யக்கூடிய ஸ்வீட்  செய்து பார்க்கலாம். 


அதுதாங்க பிரெட் ஹல்வா.. செம்ம டேஸ்ட்டா இருக்கும். குறைந்த பொருட்களிலேயே ரொம்ப நல்ல ருசியோட இதை செய்யலாம். வாங்க கிச்சனுக்குள் போலாம்.


தேவையான பொருட்கள்:


பிரெட் – 5 முதல் 6 ஸ்லைஸ்

சர்க்கரை – 1 கப்

தண்ணீர் – ½ கப்

நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு

முந்திரி – 10 முதல் 15

திராட்சை – 1 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய் பொடி – சிட்டிகை


செய்முறை:




முதல்ல பிரெட்டோட சைட்ல இருக்கும் கடினமான கருப்புக் கர்னர்ஸை கட் பண்ணி எடுத்து விடுங்க. அப்புறம் அந்த பிரெட்டை சின்ன சின்ன கியூப்ஸா வெட்டிக்கோங்க. இதுல தான் பா நல்லா சோக் ஆகும்.


இப்போ ஒரு கடாய்ல நெய்யோ அல்லது எண்ணெய்யோ ஊற்றி, பிரெட் துண்டுகளை போட்டு மிதமான தீயில் ரோஸ்ட் பண்ணுங்க. பிரெட் லைட்டா குர்குரப்பா, கோல்டன் கலர்ல வரணும். இது முக்கியம் — அப்படித்தான் சிரப்புல போட்டா மெத்தமா சுருண்டு போகாது.


அடுத்த ஸ்டெப்பா, வேற ஒரு கடாய்ல சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்க. சர்க்கரை முழுக்க கரையணும். ஒரு ஸ்டிக்கி மாதிரி (ஒரு நூல் பதம் வர்ற மாதிரி இல்ல, அதுக்கு முன்னாடி) consistency வந்தா போதும். ரொம்ப கெட்டியாக்க வேண்டாம்.


அந்த சிரப்புல ரோஸ்ட் பண்ணிய பிரெட்டை போட்டு நன்றாக கிளறுங்க. ஒவ்வொரு பீஸும் சிரப்பை நல்லா உறிஞ்சணும். இந்த ஸ்டேஜ்ல தீயை குறைச்சு வைத்து கிளறினா அடிப்படாமல் இருக்கும்.


வேற ஒரு சின்ன பான்ல கொஞ்சம் நெய் ஊற்றி, முந்திரி பொன்னிறமா வரும் வரை வறுக்கவும். அப்புறம் திராட்சை சேர்த்தா அது புடிச்சு புடிச்சு உப்புனு வரும் — அதுதான் சரியான ஸ்டேஜ். இதை உடனே பிரெட் கலவையில சேர்க்கவும்.


கடைசில ஏலக்காய் பொடி தூவி நல்லா ஒரு கிளறல் கொடுத்தா, நறுமணம் ரொம்ப நல்லா வரும்.


சிறிய டிப்ஸ்:


- நெய்யில பண்ணினா ருசி இன்னும் ரிச்சா இருக்கும்

- சிரப்பு ரொம்ப கெட்டியாகிட்டா, கொஞ்சம் சூடுநீர் சேர்த்து சரி பண்ணிக்கலாம்

- பிரெட் ரொம்ப நேரம் ரோஸ்ட் பண்ணினா கரிஞ்சு கசப்பா ஆகிடும், கவனமா இருக்கணும்


இது சூடா இருக்கும்போது சாப்பிட்டா ரொம்ப சுவை. குளிர்ந்த பிறகும் மென்மையான ஸ்வீட்டா இருக்கும். வீட்ல இருக்கும் சாதாரண பிரெட்டை இப்படி ஒரு டேஸ்டியான டெசர்ட்டா மாற்றிக்கலாம்.


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)