என்னாது சிலிண்டர் தீந்துருச்சா.. அடுப்பில்லாத சமையல் கைவசம் இருக்கே.. வாங்க வாங்க!

Mar 12, 2026,05:02 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


எங்க பார்த்தாலும் கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை என்ற பேச்சாதான் இருக்கு. கேஸ் பற்றாக்குறை ஏற்படும் இந்த நேரத்தில் அடுப்பில்லாத சமையலைப் பற்றி நாமெல்லாம் யோசிக்க வேண்டியதுதான். அதைப் பயன்படுத்தி கேஸ் சிக்கனம் செய்தும் மகிழலாம்.


மாவிளக்கு மாவு பதத்தில் சுவையான லட்டு தயாரிக்கலாமா.. சூப்பரா இருக்கும் சாப்பிடுவதற்கும்.


தேவையான பொருட்கள்:




சிகப்பு அரிசி ஒரு கப்பு

பச்சரிசி ஒரு கப்

நாட்டு சர்க்கரை அல்லது வெல்லத்தூள்

ஏலக்காய்

நெய்  

முந்திரி அல்லது நிலக்கடலை


செய்முறை:


பச்சரிசி மற்றும் சிகப்பரிசியினை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு நீரை வடிகட்டி உலர்த்த வேண்டும். அவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேவைக்கேற்ப நெய் ,ஏலக்காய் தூள் ,நாட்டு சர்க்கரை கலந்து லட்டாக ஆக உருண்டை  பிடிக்கவும். அவற்றின் மேல் முந்திரி அல்லது நிலக்கடலையை சொருக வேண்டும்.




சுவையான மாவிளக்கு லட்டு தயார்.


இந்த லட்டு குழந்தைகளுக்கும் ,பெரியவர்களுக்கும்  கண்டிப்பாக பிடிக்கும்.


சிகப்பு அரிசி போன்ற சத்தான உணவினை பயன்படுத்தி இயற்கையோடு வாழ பழகுவோம்.


கேஸ் இல்லாத நேரத்தில், அவசர காலங்களில் இதுபோன்ற சத்தான உணவுகளையும் அவ்வப்போது ஒரு கை பார்க்கத் தவறாதீர்கள்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்