தானியங்கள் இல்லாமல் சமைக்க முடியுமா.. அவை இல்லாமல் உயிர் வாழ முடியுமா?

Mar 07, 2026,02:57 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed,B.A(Hindi)


தானியங்கள் இல்லாமல் சமைக்க முடியுமா ? தானியங்கள் இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியாது என்பதை உணர்ந்து தானியங்களை சேமிப்பதற்காக இன்றைய நாளை சிறப்பாக கொண்டாடுவோம்.


தேசிய தானிய தினம் (National Grain Day)


 


தேசிய தானிய தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 7 அன்று கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் உணவில் தானியங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. அரிசி, கோதுமை, சோளம், கம்பு, ராகி போன்றவை முக்கிய தானியங்களாகும். தானியங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. 


அவை கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் நிறைந்தவையாக காணப்படுகின்றன. 


உலக மக்கள் தொகையில் பெரும்பாலோர் தானியங்களை அடிப்படை உணவாக பயன்படுத்துகிறார்கள். 

விவசாயிகளின் உழைப்பால் தானியங்கள் நமக்கு கிடைக்கின்றன. தானியங்களை மதித்து பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்.


காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடிய பாரதியாரின் பாடலுக்கு ஏற்ப நாம் நம்மால் முடிந்த தானியங்களை காக்கை குருவிகளுக்கு தினமும் வீட்டில் வைப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.


திருவள்ளுவர் தினமும் சாப்பிடும் பொழுது தனது மனைவிடம் ஒரு டம்ளர் நீரும் ஊசியும் வைக்க சொல்லுவார் . அது எதற்காக என்றால் கீழே ஏதேனும் சாதம் விழுந்தால் அதை ஊசியில் எடுத்து தண்ணீரில் கழுவி சாப்பிட வேண்டும் என்பதற்காக என்று  தனது மனைவி வாசுகியிடம் சொன்னார். ஆனால் அவர் ஒரு முறையும் கூட கீழே சிந்தி சாப்பிட்டதில்லை. 


இப்படி இப்படி சிறப்பு வாய்ந்த வள்ளுவரைப் போல் நாமும் தானியங்களை வீணாக்காமல் சாப்பிடுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். 


உணவு பாதுகாப்பில் தானியங்கள் முக்கிய பங்கு வகிப்பதால் உணவை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஒவ்வொருவர் வீட்டிலும் தனது குழந்தைகளுக்கும், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் தனது மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாய கடமையாகும்.


இந்த தினம் தானியங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும், பாரம்பரிய சிறுதானியங்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என்பதை உணர்த்துவதற்கும், சிறுதானியங்கள் சர்க்கரை நோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவுகின்றன என்பதை உணர்த்துவதற்காக இந்த நாளை நாம் சிறப்பாகக் கொண்டாடுவோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்