ஆலும் வேலும் பல்லுக்கு உறுதியா? .. என்ன சந்தேகமா இருக்கா!!

Mar 06, 2026,03:03 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed,B.A(Hindi)


ஆலும் வேலும் பல்லுக்கு உறுதியா? என்று சந்தேகம் உள்ளதா? உங்கள் சந்தேகத்தை தீர்த்துக் கொண்டு இன்றைய தினத்தை கொண்டாடுவோம் .


National Dentist’s Day (தேசிய பல் தினம்) 


தேசிய பல் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 6 தேதி கொண்டாடப்படுகிறது. பல் மருத்தவர்களின் சேவையை மதிப்பிடுவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.


மனிதர்களின் வாய்ச் சுகாதாரத்தை பாதுகாப்பதில் பல் மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பற்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவூட்ட தான் இன்றைய நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது .


தினமும் சாப்பிட்ட பிறகு வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும்.  தினமும் இரு முறை பற்களை துலக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சரியான உணவு பழக்கமும் பல் ஆரோக்கியத்துக்கு அவசியம். மேலும்,  அதிக சர்க்கரை உள்ள உணவுகள் பல் சேதத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர வேண்டும். பற்களை பராமரிப்பதால் உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. பற்கள் உணவை நன்றாக மென்று செரிமானத்திற்கு உதவுகின்றன.




பல் நோய்களைத் தடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. நம் முன்னோர்கள் ஆலமர குச்சியும், வேப்பமரக்குச்சியும் வைத்து பல் துலக்கினார்கள். நாம் இப்பொழுது பல விதமான பற்பொடிகளையும் ,பற்பசைகளையும் வாங்கி பல்லை துலுக்கி கொண்டிருக்கிறோம். நொறுங்க தின்றால் நூறு வயது வாழலாம் என்பார்கள்.


90-100 வயதில் வாழும் நம் முன்னோர்கள் பல்லினை பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். இப்பொழுது உள்ள தலைமுறையில் வாழும் நாம் பூச்சி பல் ,சொத்தை பல் என பல காரணங்களை காட்டி பல் இல்லாமல் பொக்கை பல்லாகவும், செயற்கை பற்களை கட்டியும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . 


பல் மருத்துவர்கள் பல் வலி மற்றும் பல் நோய்களுக்கு  சிகிச்சை அளிக்கிறார்கள். குழந்தைகளுக்கு பல் பராமரிப்பு பற்றி அறிவுரை வழங்குகிறார் கள்.  மருத்துவரை அவ்வப்போது சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும். பல் சுத்தம் மற்றும் பல் பராமரிப்பு பற்றி பள்ளிகளில் விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.


பல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது நல்லது.  பல் போனால் சொல் போச்சு என்பதை உணர்ந்து நாம் அனைவரும் பற்களை பாதுகாப்போம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல பல் பராமரிப்பு அவசியம் என்பதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பல் மருத்தவர்களின் சேவைக்கு நன்றி கூறும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.


அனைவரும் பல் சுகாதாரத்தை கவனித்து ஆரோக்கியமாக வாழ்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்