Idli Podi: இட்லி பொடி.. சுவையான பாரம்பரிய முறையில் எப்படி தயாரிக்கலாம்?
- தெ.நாராயண லெட்சுமி, B.E
தமிழ் வீட்டுக் சமையலில் மிகவும் பிரபலமான ஒன்று இட்லி. அதிலும் அந்த இட்லிப் பொடியுடன் சேர்த்து சாப்பிடும் டேஸ்ட் இருக்கே.. ஆஹா ஆஹா.. அடிச்சுக்கவே முடியாது.
சூடான இட்லி அல்லது தோசைக்கு மேல் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து இந்த பொடியை தூவி சாப்பிட்டால் அதன் சுவை தனியே இருக்கும். வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இந்த இட்லி பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 1/2 கப்
உளுத்தம்பருப்பு – 1 கப்
வறுத்த சிவப்பு மிளகாய் – 6 முதல் 8
பூண்டு – 4 பல் (விருப்பம்)
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
செய்முறை:
1. முதலில் ஒரு கடாயில் கடலைப்பருப்பை வாசனை வரும் வரை பொன்னிறமாக வறுக்கவும்.
2. அதேபோல் உளுத்தம்பருப்பையும் வறுத்து வைக்கவும்.
3. பிறகு சிவப்பு மிளகாய் மற்றும் கருவேப்பிலையை லேசாக வறுக்கவும்.
4.எல்லா பொருட்களையும் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
5.விருப்பமிருந்தால் பூண்டு சேர்த்து அரைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
சாப்பிடும் முறை:
சூடான இட்லி அல்லது தோசைக்கு மேல் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து இந்த இட்லி பொடியை கலந்து சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும்.
சிறு குறிப்புகள்:
கருவேப்பிலை சேர்த்தால் மணமும் சத்தும் அதிகரிக்கும்.
காற்று புகாத டப்பாவில் வைத்தால் 2–3 வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.
இந்த எளிய இட்லி பொடி உங்கள் காலை உணவிற்கு சுவையும் ஆரோக்கியமும் தரும் பாரம்பரிய சமையல் ரெசிபியாகும்.
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)