- ரதி தேவி
அனைத்து வகையான துவையல்களிலும் நார்ச்சத்து மிகுந்த மிகவும் தற்போது அரிதாகவே சாப்பிடும் துவையல் பற்றி தான் பார்க்க போகிறோம்....
ஆம்...
நார்ச்சத்து மிகுந்த துவையல் பனங்கிழங்கு துவையல்...
என்னடா புதுசா என்று நினைக்க தோன்றும்....
புதுசு இல்ல....பழசு ...பாமர மக்களின் பழமையான சத்தான துவையல்.......
பனைமரம் நமது மாநிலத்தின் மாநில மரம்.... அதில் இருந்து பெறப்படும் அனைத்தும் பயனுள்ளதே.....
ஆம் அந்த வகையில் பனங்கிழங்கு துவையல் மற்றும் பனங்கிழங்கு பொடி ....
பனம் பழங்களை விதைத்து பனங்கிழங்கு பெறுவர்...... அந்த பனங்கிழங்கை பெரிய பானையில் அவித்து..... அதை உரித்து... சிறிய சிறிய துண்டுகளாக ஒடிச்சி... ஒடிக்கும் போதே அதன் நார்களை நன்றாக நீக்குவர்... அதை வெயிலில் நல்ல காயவைத்து சாக்கில் போட்டு பாதுகாப்பர்....
சிறிய வயதில் மழைக்காலங்களில் அதுதான் ஸ்னாக்ஸ் எங்களுக்கு.... அதை கடித்து சாப்பிட்டாலே பல் ஸ்ட்ராங்.........
அப்படி காயவைத்த கிழங்கு துண்டுகளைத் தான் மழைக்காலங்களில் துவையல் அரைத்து சாப்பிடலாம்.....
துவையல் நாம் செய்வது தான்..... ஆனால் அம்மியில் அரைத்து சாப்பிட்டாலே தனி ருசி தான்........

தேவையானவை ..
1. காயவைத்த பனங்கிழங்கு
2. காய்ந்த மிளகாய் வற்றல்
3. பூண்டு
4. விருப்பம் இருந்தால் புளி
5. உப்பு
தேவைப்பட்டால் தேங்காய் சேர்த்து கொள்ளலாம்.....
முதலில் பனங்கிழங்கை நல்ல அம்மியில் வைத்து பொடி ஆக்கி ... பிறகு தேவையான பொருட்களை சேர்த்து தண்ணீர் தெளித்து அரைக்கவும்.....
நன்கு அரைப் பட்டவுடன் தேவைப்பட்டால் தாளித்து கொள்ளலாம்......
சத்தான சுவையான பனங்கிழங்கு துவையல் ரெடி....
பனங்கிழங்கு சீசன் இல்லாத சமயங்களிலும் காய வைத்த பனங்கிழங்கை நாம் பயன்படுத்தலாம்.....
இது போன்று உரலில் இடித்து பொடி செய்தும் சாப்பிடலாம்...... பல் விழுந்த பாட்டிமார்கள் பனங்கிழங்கை பொடி செய்து சாப்பிடுவர்....
Old is Gold ...
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}