Summer special Mango Icecream.. மாம்பழ ஐஸ்க்ரீ்ம்.. கேட்கவே ஸ்வீட்டா இருக்குல்ல!

Su.tha Arivalagan
May 19, 2026,10:26 AM IST

- ஜி. சரளா


இப்ப மேங்கோ சீசன்ன்றதுனால பசங்களுக்கும் லீவு. ஒரு சேஞ்ச் வேணும்னு நினைச்சீங்கன்னா இதைச் செய்யலாம். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் சிம்பிளா தான் இருக்கும்.


தேவையான பொருட்கள்:


மாம்பழம் (நன்கு பழுத்தது) - 1 கப்

வாழைப்பழம் - 1

பாதாம், முந்திரி - தேவையான அளவு

சர்க்கரை - இனிப்புக்கு ஏற்ப

மில்க் மெய்டு (Milkmaid) அல்லது மலாய் (Fresh Cream) - ஒரு சிறிய கப்

ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை

டூட்டி ஃப்ரூட்டி (Tutti Frutti) - சிறிதளவு




மேங்கோவும் பனானாவும் தனியா ஸ்மாஷ் பண்ணி வச்சுக்கோங்க. மற்றொரு கிண்ணத்தில் பாதாம், முந்திரி மற்றும் சர்க்கரையைத் தனியாக எடுத்து வையுங்கள். (குழந்தைகளுக்கு கொடுப்பதால் நட்ஸ்களை பொடியாக நறுக்கிக் கொள்ளலாம்).


மில்க் மெய்டு இல்லாட்டி மலாய் இருந்தா இன்னும் நல்லா இருக்கும். எல்லாம் ஒண்ணா போட்டு ஏலக்காய் பொடியோட சேர்த்து கொஞ்சம் டூட்டி ஃப்ரூட்டியோட சேர்த்து ஒரு ரெண்டு பல்ஸ் மோடுல விட்டீங்கன்னா ஐஸ்கிரீம் ரெடி. 


திருப்பி ஒரு 2 டு 3 ஹவர்ஸ் நீங்க ப்ரீஸர்ல வச்சிட்டீங்கன்னா செட் ஆயிரும் சூப்பரா இருக்கும் இந்த டிஷ்.


குட்டீஸ்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து சாப்பிடக்கூடிய இந்த இன்ஸ்டன்ட் மேங்கோ - பனானா ஐஸ்கிரீமை இந்த வாரம் உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க!


(G Sarala, Creative Writers, Chennai)