மலாய் மட்டன் கோஃப்தா.. செம டேஸ்ட்டி.. சாப்பிட்டா சூப்பர் திருப்தி!

May 18, 2026,10:38 AM IST

- ஜி. சரளா 


ஹலோ.. டு ஆல் அட்வென்ச்சரஸ் ஈட்டர்ஸ். மலாய் மட்டன் கோஃப்தா. பேரை கேட்ட உடனே உங்க டேஸ்ட் பட்ஸ் எல்லாம் ஸ்டிமுலேட் ஆகி நிக்கும்ன்னு நினைக்கிறேன். இது ரொம்ப ஈஸின்னு சொல்ல முடியாது, கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா சாப்பிடும்போது அந்த சாட்டிஸ்பேக்ஷன் நிறைய கிடைக்கும்."


பர்ஸ்ட் உங்களுக்கு கோஃப்தா எப்படி பிரிப்பேர் பண்றதுன்னு சொல்றேன் அப்புறம் கிரேவி எப்படின்னு சொல்றேன். 


கோஃப்தாக்கு வந்து மின்ஸ்டு மட்டன் தேவைப்படும். அதுதான் முக்கியமான ஹீரோ இதுல. நீங்க என்ன பண்றீங்கன்னா மட்டன் கடைக்கு போயிட்டு மட்டன் வாங்கினோம்ன்னா அதுல போன்ஸோட சேர்ந்து தருவாங்க. நம்ம சாப்டு மட்டன் கேட்டோம்னா அது கைமா மாதிரி, அப்போ வந்து டபுள் ரேட் கேட்பாங்க. அதனால நீங்க வந்து போனோட வாங்கிட்டு வந்துட்டு மட்டன்ஸ் எல்லாம் தனியா கட் பண்ணி எடுத்துட்டு வெறும் மீட் மட்டும் எடுத்துக்கோங்க. 


அந்த ஃபிளஷ் மட்டும் எடுத்துட்டு மிக்ஸியில் ஒரு பல்ஸ் மோடில் ஒரு ரெண்டு தடவை போட்டீங்கன்னா போதும் ரொம்ப நைஸ் ஆயிடும். அதுல வந்து பொடியா நறுக்கின வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் அது கூடவே கொஞ்சம் சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காயோட பேஸ்ட் அப்புறம் கடலைப்பருப்பு ஊற வச்சு மசாலா வடைக்கு செய்வோம் இல்லையா அதே மாதிரி அந்த பேஸ்ட், அதுக்கப்புறம் கொஞ்சம் புதினா சாப் பண்ணி வச்சிக்கிட்டு பொடியா அதையும் போட்டு மிக்ஸ் பண்ணி வச்சிக்கணும். 




அதுக்குத் தேவையான உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொஞ்சம் பெருங்காயத் தூள் போட்டு மிக்ஸ் பண்ணி வச்சிட்டு குட்டி குட்டி பால்ஸா வச்சிக்கோங்க. கடாயில எண்ணெய் பாயில் பண்ணிட்டு இதைப்போட்டு நல்லா ஃப்ரை பண்ணி எடுங்க. ரொம்ப டார்க்காவும் வேண்டாம் ரொம்ப பிரவுனா வேண்டாம் கோல்டன் பிரவுனா எடுத்துக்கோங்க.


கிரேவி எப்படி பண்ணனும்?


இப்ப இதுக்கு கிரேவி எப்படி செய்யணும்னு சொல்றேன். வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் கொஞ்சம் சோம்பு பட்டை லவங்கம் ஏலக்காய் எல்லாத்தையும் வதக்கிட்டு மிக்ஸியில் ஆறின பிறகு மிக்ஸியில் அரைச்சிட்டு அதை திருப்பி எண்ணெய் ஊத்தி கொஞ்சம் சீரகம் போட்டு நல்லா ஃப்ரை பண்ணிக்கோங்க. 


மறுபடியும் அந்த கிரேவிய... அது கொஞ்சம் எண்ணெய் தனியா பிரிஞ்சு வரப்போ நிறைய தண்ணி விட்டு நல்லா இந்த மலாய்... கோஃப்தாவெல்லாம் போட்டு நல்லா ஒரு ரெண்டு பபுள் வர வச்சுக்கோங்க. 


இறக்குறதுக்கு முன்னாடி இப்போ பிரஷ் கிரீம் ஊத்தலாம். பிரஷ் கிரீம்கிறது நீங்க வந்து வெளிய வாங்கி வச்சிருந்தாலும் ஓகே. இல்லை ஒரு ஹாப் அ டம்பளர் பாலோட ஏடு வச்சிருந்தீங்கன்னா  அது கூடவே ஒரு ரெண்டு பாதாம் ரெண்டு முந்திரி போட்டு மிக்ஸியில் நல்லா அரைச்சிட்டு இறக்குறதுக்கு முன்னாடி இதை விட்டுட்டு தேவையான அளவு உப்பு போட்டுட்டு சர்வ் பண்ணலாம்.


சாப்பிட்டுப் பாருங்க.. டேஸ்ட்டுக்கு அடிமை ஆகிருவீங்க.


(G Sarala, Creative Writers, Chennai)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

news

"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு

news

TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!

news

ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!

news

அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு

news

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

news

Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

news

கிரீடம் அணிந்த மொட்டுகள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

இமயமலையில் அவதரித்த.. தனித்துவ மலர்.. பிரம்ம கமலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்