தலைவலி ஏன் வருகிறது.. வந்தா என்ன பண்ணலாம்?
- தெ.நாராயண லெட்சுமி, B.E
இப்போ பல பேருக்கும் அடிக்கடி தலைவலி வரும். சிலருக்கு முன் தலைவலி, சிலருக்கு பின் தலைவலி, சில நேரம் தலையே சுருக் சுருக்கன்னு கொடுக்கிறது. இன்னும் சிலருக்கு உச்சி மண்டையில மட்டும் வலி இருக்கும். இப்படி தலைவலிக்கு பல வகைகள் இருக்குது. ஒவ்வொரு வலிக்கும் பின்னாடி காரணமும் வேறவேறா இருக்கும்.
முன் தலைவலி
முன் தலையில் வலி வந்தா பெரும்பாலும் அது தூக்கம் சரியில்லாம இருக்குறதால, அதிகமாக மொபைல் அல்லது லாப்டாப் பார்த்ததால, கண் சோர்வு அதிகமா இருந்ததால வரும். சில நேரம் குளிர், சளி இருந்தாலும் இந்த மாதிரி முன் தலையில் வலி இருக்கும்.
பின் தலைவலி
பின் தலையில் வலி வந்தா அது அதிகமாக டென்ஷன், மன அழுத்தம், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பண்ணுறது, அல்லது கழுத்து ஸ்டிஃப்னஸ் இருந்ததால வரும்.
சுருக் சுருக் தலைவலி
சிலருக்கு தலையில் சுருக் சுருக்குன்னு துடிப்பு மாதிரி வலி இருக்கும். இது பெரும்பாலும் அதிக ஸ்ட்ரெஸ், சோர்வு, சரியான நேரத்தில் சாப்பிடாதது, உடம்பு நீர் குறைவு இதுபோல காரணங்களால வரும்.
உச்சி மண்டை வலி
உச்சி மண்டையில் மட்டும் வலி இருந்தா அது சில நேரம் உடம்பு அதிகமாக சூடாக இருந்ததால, தூக்கம் குறைவு இருந்ததால, அல்லது ரத்த அழுத்தம் (BP) அதிகமா இருந்ததால கூட வர வாய்ப்பு இருக்கு.
தலைவலி வந்தா என்ன பண்ணலாம்?
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கணும்
சரியான நேரத்தில் சாப்பிடணும்
தினமும் குறைந்தது 6–7 மணி நேரம் நல்லா தூங்கணும்
அதிக நேரம் மொபைல், டிவி பார்ப்பதை குறைக்கணும்
மன அழுத்தம் அதிகமா இருந்தா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கணும்
கழுத்து மற்றும் தோள்பட்டை ஸ்ட்ரெச்சிங் exercise பண்ணினா நல்லா இருக்கும்
ஆனா தலைவலி அடிக்கடி வந்துட்டே இருந்தா அல்லது அதிகமாக வலி இருந்தா டாக்டரை கண்டிப்பா பார்க்கணும். சரியான காரணம் தெரிஞ்சு சிகிச்சை எடுத்தா தான் இந்த பிரச்சனை சரியாகும்.
சுருக்கமாக சொன்னா, தலைவலி ஒரு சாதாரண விஷயம் மாதிரி தோன்றினாலும், அதை லேசா எடுத்துக்கக்கூடாது. உடம்பு கொடுக்கிற சின்ன சின்ன சைகைகளை கவனிச்சா தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)