- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
தனது குழந்தை கிறுக்கிக் கொண்டே இருக்கிறது என கவலை வேண்டாம். என்ன சொல்றீங்க? புரியவில்லையே?
இதோ அதற்கான விளக்கம் வருகிறது .
தேசிய Scribble தினம் மார்ச் 27 அன்று கொண்டாடப்படுகிறது. இது சுதந்திரமாக வரைதலை ஊக்குவிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.
Scribble என்பது சிந்தனையின் முதல் படியாகும். யாரும் பயமின்றி வரைய முடிகிறது. இதில் எந்த விதிமுறைகளும் விதிப்பதில்லை. இதனால் குழந்தைகள் மிகவும் விரும்பும் நாளாக கொண்டாடப்படுகிறது.
Scribble கற்பனை திறனை வளர்ப்பதோடு மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இது ஒரு சுய வெளிப்பாட்டு முறையாக காணப்படுகிறது.
Scribble" என்ற ஆங்கில வார்த்தைக்குத் தமிழில் கிறுக்கல், அலட்சியமாக எழுதுதல், அல்லது தெளிவற்ற கையெழுத்து என்று பொருள் ஆகும். இது பொதுவாகப் புரியாத வகையில் அல்லது மிக வேகமாகக் கிறுக்கி எழுதுவதைக் குறிக்கிறது.

(Scribble/Doodle) என்பது ஒரு பொருளின் மீது புரியாதபடி வரைவதாகும். அலட்சியமாக எழுதுதல், கவனமில்லாமல் வேகமாக எழுதுதல், தெளிவற்ற கையெழுத்து (Bad Handwriting) மற்றும் வாசிக்க முடியாத எழுத்து வடிவமமாக காணப்படுகிறது.
பல கலைஞர்கள் Scribble மூலம் புதிய யோசனைகளை உருவாக்குகிறார்கள். Scribble அழகான கலைப்படைப்பாக காணப்படுகிறது. இதனை அனைவரும் எங்கே வேண்டுமானாலும் Scribble செய்து பார்க்கலாம். மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருவதற்காக பள்ளிகளில் மாணவர்கள் Scribble செய்ய ஊக்குவிக்கப் படுகிறார்கள். இது குழந்தைகளின் கை இயக்க திறனை மேம்படுத்துகிறது.
Scribble தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. பேனா, பென்சில், நிறங்கள் அனைத்தாலும் செய்து பார்க்க முடிகிறது.
சரி, தவறு என்ற கருத்தே இந்த கலையில் கிடையாது. இது சிந்தனை திறனை வளர்க்கவும், Scribble செய்வது எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் காணப்படுகிறது.
இது மனதை சுதந்திரமாக சிந்திக்க வைப்பத்தோடு பெரியவர்களும் இதை ரசிக்கும் வகையில் அமைகிறது.
இது விளையாட்டுத் தனமான செயலாகவும், Scribble உணர்வுகளையும், கலைகளையும் இணைக்க உதவுகிறது.
எளிய முறையில் படைப்பாற்றலை உருவாக்க முடிகிறது.
இன்றைய நாளில் Scribble செய்து கலை சுதந்திரத்தை உருவாக்கி பார்ப்போம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு
{{comments.comment}}