- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும் என்ற நாடக பழமொழியை கேட்டதும் நாம் சிறுவயதில் பார்த்த நாடகங்கள் நினைவில் வருகிறதா?
இன்றைய காலகட்டத்தில் நாடக கலைஞர்களை பார்ப்பது அரிதாக உள்ளது. நாம் அனைவரும் நாடக கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பை அளித்து நாடகக் கலையை மலர செய்வோம்.
உலக நாடக தினம் (World Theatre Day)
உலக நாடக தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 1961 ஆம் ஆண்டு International Theatre Institute மூலம் தொடங்கப்பட்டது. நாடகக் கலையின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் எடுத்துரைப்பதே இதன் நோக்கமாகும்.
1962 ஆம் ஆண்டு முதல் , உலக நாடக தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 ஆம் தேதி, உலகெங்கிலும் உள்ள ஐடிஐ மையங்கள், ஐடிஐ கூட்டுறவு உறுப்பினர்கள், நாடகத் துறை வல்லுநர்கள், நாடக அமைப்புகள், நாடகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நாடக ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடகம் என்பது பழமையான கலை வடிவங்களில் ஒன்றாக காணப்படுகிறது. இது மனித உணர்வுகளையும்,சமூகச் சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்த கருவியாக காணப்படுகிறது. நாடகம் என்பது மனித வாழ்க்கையின் அகப்பரிமாணத்தை, சமூகத்தின் நிகழ்வுகளை மேடையில் பிரதிபலிக்கச் செய்கிறது.
நாடகம் கல்வி, கலாசாரம் மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகவும் உதவுகிறது. உலக நாடக தினத்தில் பல நாடுகளில் நாடக கலைஞர்களால் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இதன் மூலம் நாடக கலைஞர்கள் மற்றும் நாடக அமைப்புகள் வளர்க்கப்படுகின்றன.
தமிழ்நாட்டிலும் நாடகக் கலைக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது. பழம்பெரும் தமிழ் நாடகங்கள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது. பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடக வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தார். நாடகம் மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பாக கருதப்படுகிறது.
இது சிந்தனைத் திறனை வளர்க்கிறது. நாடகங்கள் மூலம் நல்ல பண்புகள் மக்களிடம் எளிய முறையில் பரவுகிறது.
மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு மேடை நாடகமாக காணப்படுகிறது. நாடகப் பயிற்சி நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.
கலைஞர்களுக்கு நாடகம் ஒரு வாழ்வாதாரமாகவும் உள்ளது. உலக நாடக தினம் கலைஞர்களின் உழைப்பை பாராட்டும் விதமாக இன்றைய நாளை சிறப்பாக கொண்டாடுவோம். சமூக பிரச்சினைகளை எடுத்துரைக்க நாடகம் பெரிதும் உதவுகிறது. இது மக்களை சிந்திக்கவும் மாற்றமடையவும் தூண்டுகிறது.
நாடக மேடை கலை மற்றும் கலாசாரத்தை இணைக்கிறது. உலக நாடக தினம் கலை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பதோடு இளம் தலைமுறையை நாடகக் கலையில் ஈர்க்கிறது. பல்வேறு மொழிகளில் நாடகங்கள் நடத்தப்படுகின்றன. இது உலக கலாசாரங்களை அறிய உதவுகிறது. நாடகம் மகிழ்ச்சியையும் அறிவையும் வழங்குகிறது.
உலக நாடக தினத்தில் கலைஞர்களுக்கும் கலைக்கும் மரியாதை செலுத்துவோம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)
சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம்.. விவாதத்திற்குப் பின் நிறைவேறியது
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!
கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!
தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்
நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்
LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்
அபுதாபி செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச நுழைவு விசா
Seenu Ramasamy comments: பட்ஜெட் பற்றிப் பேசுங்கள்.. வாசித்தவரைப் பற்றிய விவாதம் டைம் வேஸ்ட்!
அருணின் மாற்றம்.. திருக்குறள் கதை!
{{comments.comment}}