Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

Sep 25, 2026,12:09 PM IST

- ராதா ஜானகிராம்


திருநெல்வேலி சீமையின் பாரம்பரிய சுவையான சொதி சாப்பாடு குறித்துக் கேள்விப்பட்டிருக்கீங்களா.. பெயரைக் கேட்டதுமே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பிச்சுருங்க.


நெல்லைக்கே உரித்தான தனித்துவமான பாரம்பரிய விருந்து என்றால் அது சொதி குழம்பு சாப்பாடுதான்!


தேங்காய்ப்பாலின் நறுமணம், பாசிப்பருப்பின் கெட்டித்தன்மை, காய்கறிகளோடு லேசான எலுமிச்சைப் பழ புளிப்பு சேர்ந்து, சுடச்சுட சாதத்தில் ஊற்றி பிசையும் போது வரும் மணமும் சுவையும் அலாதியானது.


இலை நிறைய சொதி சோற்றுடன், காரசாரமான இஞ்சித் துவையல் அல்லது இஞ்சி பச்சடி மொறுமொறுப்பான வாழைக்காய் சிப்ஸ் உருளைக்கிழங்கு அல்லது காய்கறி பொரியல் இவற்றுடன் சேர்த்து சாப்பிடும் போது சொதியின் மெல்லிய சுவைக்கு, இஞ்சி பச்சடியின் காரமும் சிப்ஸின் மொறுமொறுப்பும் அற்புதமான சுவைக் கூட்டணியாக அமையும். 


திருமணமான புது மாப்பிள்ளை விருந்தில் இந்த சொதிக்குழம்பு கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.


சொதி குழம்பு – செய்முறை


தேவையான பொருட்கள்:




* தேங்காய் – 1 மூடி

* பச்சை மிளகாய் – 3

* இஞ்சி – சிறிய துண்டு

* மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

* சின்ன வெங்காயம் – 10

* கேரட் – 1

* பீன்ஸ் – 10

* உருளைக்கிழங்கு – 1

* முருங்கைக்காய் – 1

* உப்பு – தேவையான அளவு

* எலுமிச்சை – ½ பழம்

* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

* கடுகு – ½ டீஸ்பூன்

* சீரகம் – ½ டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை:


தேங்காயை அரைத்து முதல் பால், இரண்டாம் பால் என்று தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும். காய்கறிகளை நறுக்கி, இரண்டாம் தேங்காய்ப்பால், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும்.


காய்கறிகள் நன்றாக வெந்ததும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும். இப்போது முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி, அடுப்பை குறைந்த தீயில் வைத்து சூடாக்கவும். கொதிக்க விடக்கூடாது.


தேவையான உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.


ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து சொதியில் சேர்க்கவும்.

கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.


சுவையான திருநெல்வேலி சொதி குழம்பு தயார்!


சூடான சாதத்துடன் பரிமாறலாம். உருளைக்கிழங்கு பொரியல், காய்கறி பொரியல், இஞ்சி பச்சடி, வாழைக்காய் சிப்ஸ் அல்லது அப்பளத்துடன் பரிமாறினால் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.


குறிப்பு: சொதியின் முக்கியமான சுவை தேங்காய்ப்பால் + லேசான எலுமிச்சைப் புளிப்பு. குறிப்பாக முதல் தேங்காய்ப்பாலை சேர்த்த பிறகு கொதிக்க விடாமல் குறைந்த தீயில் சூடாக்குவது மிகவும் முக்கியம்.


(கட்டுரையாளர் ராதா ஜானகிராம், B.A. தீவிர சிவபக்தை. திருமுறைகள் மற்றும் திருவாசகத்தின் மீது தனிப்பட்ட ஆர்வம் உண்டு. திருவாசகம் முற்றோதல் நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். கையிலை அறக்கட்டளை நடத்தும் “சைவ சித்தாந்தச் சுடர்” வகுப்பில் கலந்து கொண்டு பட்டம் பெற்றுள்ளார். சைவ சமயம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறேன். ஜெயசுகந்தி அவர்கள் நடத்தும் "அருள் சக்தி ஆலயம்" குழுவில் பயணிக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

news

தலையங்கம்: சிறுமிகளுக்கு எதிரான கொடூரம்.. அயோக்கியர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும்!

news

ஏகாதசி விரதத்தின் மகிமை அல்லது அம்பரீஷ மஹாராஜாவின் பக்தி!

news

கீழ்வானம் செந்நிற ஆடை அணிய.... மலர்கள் சோம்பல்முறிக்க...!

news

திருமலை குமாரசுவாமி திருக்கோவில்.. குன்றின் மீதமர்ந்து.. அருள் பாலிக்கும் முருகப் பெருமான்!

news

"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்".. கதை அல்ல நிஜம் (2வது பகுதி)

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Story by Pooranavalli Sekar: பொறுமை.. ஒரு நிமிடக் கதை (20)

அதிகம் பார்க்கும் செய்திகள்