மெந்திய மசியலும் வாழைக்காய் கொழுக்கட்டையும்!

Sep 24, 2026,04:56 PM IST

- சுதா திருநாராயணன்


கணவர்: "அம்ருத பலவல்லி, ஏய் அம்ருதபலவல்லீஈஈஈஈ.. கரடியா கத்தறேனே  காதுல விழறதா இல்லையா?"


மனைவி: வரேன் வரேன் எதுக்காக இப்படி என்னோட முழு பெயரையும் கத்தி கத்தி கூப்பிடணும் ?


கணவன்: என்ன அநியாயம் பண்ணறே நீ?


மனைவி: என்ன  அநியாயம் பண்ணிட்டேன் நான் இப்போ ?  நீங்களும் போட்டோக்கு வாங்கோன்னு தான் கூப்பிட்டேன். ஆனால் நீங்க என்ன சொன்னீர்கள்?  நீதானே சமையல் எல்லாம் பண்ணினே. நீயே  ஜட்ஜோட போட்டோ எடுத்துக்கோ, நான் வரலை,  வேண்டாம்ன்னு பெருந்தன்மையாக சொல்லிட்டு பின்னால உட்கார்ந்து முறைச்சு முறைச்சு பார்த்துட்டு இருந்தேள். 


நானும் சரி  there is a man behind every successful women அப்படின்னு சொல்லுவாளேன்னு மனச தேத்திண்டு போட்டோ எடுத்துண்டேன். 




கணவன் :   அதச் சொல்லலேம்மா. 


மனைவி:   பின்ன எதையாம்?


கணவன்:  வருஷாவருஷம் சமையல் போட்டியில் கலந்துண்டு மெந்திய மசியல்  பண்ணி எங்க மாமியார் சொல்லிக் கொடுத்தா,  மாமியார் சொல்லிக் கொடுத்தான்னு அலப்பறை பண்றியே, அதைத்தான் சொல்ல வந்தேன்.


மனைவி:  ஆமாம் நான் உண்மையைத்தானே சொன்னேன். உங்க  அம்மா தானே எனக்கு சொல்லி கொடுத்தார். இன்னும் புளிப்பு கூட்டு, புளிக்கீரை இதெல்லாமும் சொல்லணும். 


கணவன்:  அது சரி. நான் உனக்கு என்ன சொல்லி இருக்கேன் ? எங்காத்துல ஏகாதசிக்கு ஏகாதசி எப்போதும் மெந்திய மசியல் தான் பண்ணுவா. எனக்கு அதை சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்துப் போய் பிடிக்காமலேயே போயிடுத்து. நீ எப்போ பார்த்தாலும் அதையே சொல்லி, எனக்கு தெரிஞ்சவா எல்லாரும் "மாமா, நீங்க ரொம்ப லக்கி, உங்க அம்மாவுக்கு அப்புறம் உங்க ஆத்துக்காரி பேஷா மெந்திய மசியல் பண்ணி போடறா", அப்படின்னு உன்னை புகழ்ந்து என் உயிர வாங்கறா


 அதனால இன்னிக்கு என்ன பண்ணினேன் தெரியுமா ?  ஜட்ஜு உன் பெயர்தான் முதல் பரிசுக்காக  சொல்ல வந்தார். நீ பண்ணியிருந்த வாழைக்காய் கொழுக்கட்டையை அவர் வாயில போட்டு உன் பெயரை சொல்ல விடாமல் பண்ணிட்டேன்.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்மாப்பா வேலைக்குப் போகட்டும்.. புள்ளைங்க ஜாம் ஜாம்னு சாப்பிட்டு படிக்கட்டும்!

news

Poem by Malliga Selvaraj: வழி பிறந்தது.. ஒரு வாசல் மூடப்பட்டு இருள் சூழ்ந்தாலும்!

news

பாஜக.,வை எதிர்த்ததாலேயே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்...அபிஜீத் திப்கே குற்றச்சாட்டு

news

ஜெம் வீரமணி மீது வீடியோ ஆதாரத்துடன் புகார்: காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் பரபரப்பு தகவல்

news

ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது

news

இடைத்தேர்தலில் தவெக.,வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு...காலியாகிறது அதிமுக கூடாரம்

news

மெந்திய மசியலும் வாழைக்காய் கொழுக்கட்டையும்!

news

House Husband-களும் இருக்க முடியும்! குடும்ப அமைப்பைப் பாதுகாக்க மதுரை ஐகோர்ட் கிளை கருத்து

news

அன்பின் அணைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்