- ஒரு நிமிடக் கதை அரசி" பூரணவள்ளி சேகர்
ஆகாஷின் அப்பா ஒரு நாள் ஒரு பெரிய பப்பாளிப் பழத்தை வாங்கி வந்தார். அதன் சுவை ஆகாஷுக்கு மிகவும் பிடித்திருந்தது.
பப்பாளியின் சுவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்ததால் தன் அப்பா வாங்கித் தந்த பப்பாளி பழ விதையை நட்டு நிறைய பப்பாளிச் செடிகளை வளர்த்து நிறைய பழங்களை விளைவித்து நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தான்.
அதேபோல் பப்பாளி விதைகளை சிறிது காய வைத்து மண்ணில் ஊன்றி தினமும் பார்த்து நீர் விட்டு வந்தான். ஓரிரு வாரங்கள் கழித்து ஒரு பப்பாளிச் செடி துளிர் விட்டு வளர்ந்தது.
ஆகாஷ் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். தன் நண்பர்களிடம் தன் பப்பாளி செடி பற்றி ஆர்வமுடன் சொன்னான்.
தன் பப்பாளி மரம் காய்த்தவுடன் அவற்றைப் பழுக்க வைத்து எல்லா நண்பர்களுக்கும் தருவேன் என்று நிறைவாகக் கூறி வந்தான். துளிர் விட்ட செடி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக வளர்ந்தது. பப்பாளி மரத்தைத் தன் உயிராக நேசித்தான் ஆகாஷ்.

ஆகாஷின் அறிவியல் ஆசிரியர் பழக்கலவை செய்ய வேண்டும் என்று கூறிய போது தன் வீட்டில் பப்பாளி மரம் காய்த்துப் பழுத்த பின் நான் நிறைய கொண்டு வந்து தருகிறேன் டீச்சர் என்று கூறினான்.
ஆசிரியர் அவனது செடி சிறியதாக இருப்பதால் அது இப்போதைக்கு காய்க்காது. காய்த்தவுடன் பார்க்கலாம் என்று கூறினார்.
சிறிது நாளில் பப்பாளிச் செடி மரமாக வளர்ந்தது. மரத்தில் பூக்கள் சரம் சரமாகத் தொங்கின. ஆகாஷ் பப்பாளிப் பிஞ்சுகளைக் காண ஆவலுடன் இருந்தான்.
அறிவியல் ஆசிரியர் ஒரு நாள் அந்த பப்பாளி மரம் பற்றி வினவினார். ஆகாஷ் என் வீட்டு பப்பாளி மரத்தில் பூக்கள் சரம் சரமாக இருக்கிறது டீச்சர். விரைவில் காய்த்து விடும் என்று பதில் கூறினான்.
அறிவியல் ஆசிரியர் அதிர்ந்து போனார். பின் ஆகாஷை அழைத்து நாளைக்கு நீ பள்ளிக்கூடம் வரும் போது பப்பாளி மரத்தின் பூக்களைப் பறித்து வா. மேலும் இன்று சாயந்தரம் உன் பப்பாளி மரத்துப் பூக்களுடன் நீயும் சேர்ந்து அழகாக ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பு என்று சொன்னார்.
ஆகாஷ் ஆசிரியர் சொன்னது போல புகைப்படம் எடுத்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உள்ள புலனக் குழுவில் பதிவிட்டான். மறுநாள் பூச் சரங்களை வகுப்பிற்கும் கொண்டு வந்து ஆசிரியரிடம் கொடுத்தான்.
பப்பாளி பூச் சரத்தைப் பார்த்த ஆசிரியர் இது ஆண் பப்பாளி மரத்தின் பூ என்றும் இந்த மரத்தில் காய்கள் காய்க்காது என்றும் விளக்கினார். பின் தான் கொண்டு வந்திருந்த பப்பாளிப் பூவைக் காட்டினார். இதுபோல் பெண் பப்பாளி மரத்தில் பூ தனித்தனியாக மரத்தை ஒட்டியே பூத்திருக்கும். அந்த பூக்களே காய்களைத் தரும் என்று தன் மாணவர்களுக்கு விளக்கினார்.
ஆகாஷ் மற்றும் மற்ற மாணவர்கள் ஆண் மற்றும் பெண் பப்பாளி மரங்கள் பற்றி அறிந்து கொண்டனர். ஆகாஷ் மீண்டும் பப்பாளிப் பழங்கள் வாங்கி சாப்பிட்டு புதிய மரங்கள் வளர்க்க முயற்சி செய்தான்.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
Manima Chettinadu Recipes: தின்னத் தின்னத் தெவிட்டாத வாழைப்பூ பந்து!
வெறும் பேச்சிலர் கூடாது!
பப்பாளி .. ஒரு நிமிடக் கதை (57)
பொங்கல் பண்டிகை 2027: சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்
“ஒரு பக்கெட் தண்ணீரைக் கூட கர்நாடகாவால் நிறுத்த முடியாது” - துரைமுருகன் திட்டவட்டம்
தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: அன்பில் மகேஷ் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
நீடிக்கும் சர்ச்சைகள்- சிக்கும் எம்எல்ஏக்கள் - முதல்வர் விஜய் என்ன செய்ய வேண்டும்?
நம்மைக் காக்கும் காவல் தெய்வம்.. என் உயிர்த் தோழன்!
மடியில் விழுந்த மலர்
{{comments.comment}}