என்னாது சிலிண்டர் தீந்துருச்சா.. அடுப்பில்லாத சமையல் கைவசம் இருக்கே.. வாங்க வாங்க!
- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
எங்க பார்த்தாலும் கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை என்ற பேச்சாதான் இருக்கு. கேஸ் பற்றாக்குறை ஏற்படும் இந்த நேரத்தில் அடுப்பில்லாத சமையலைப் பற்றி நாமெல்லாம் யோசிக்க வேண்டியதுதான். அதைப் பயன்படுத்தி கேஸ் சிக்கனம் செய்தும் மகிழலாம்.
மாவிளக்கு மாவு பதத்தில் சுவையான லட்டு தயாரிக்கலாமா.. சூப்பரா இருக்கும் சாப்பிடுவதற்கும்.
தேவையான பொருட்கள்:
சிகப்பு அரிசி ஒரு கப்பு
பச்சரிசி ஒரு கப்
நாட்டு சர்க்கரை அல்லது வெல்லத்தூள்
ஏலக்காய்
நெய்
முந்திரி அல்லது நிலக்கடலை
செய்முறை:
பச்சரிசி மற்றும் சிகப்பரிசியினை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு நீரை வடிகட்டி உலர்த்த வேண்டும். அவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேவைக்கேற்ப நெய் ,ஏலக்காய் தூள் ,நாட்டு சர்க்கரை கலந்து லட்டாக ஆக உருண்டை பிடிக்கவும். அவற்றின் மேல் முந்திரி அல்லது நிலக்கடலையை சொருக வேண்டும்.
சுவையான மாவிளக்கு லட்டு தயார்.
இந்த லட்டு குழந்தைகளுக்கும் ,பெரியவர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.
சிகப்பு அரிசி போன்ற சத்தான உணவினை பயன்படுத்தி இயற்கையோடு வாழ பழகுவோம்.
கேஸ் இல்லாத நேரத்தில், அவசர காலங்களில் இதுபோன்ற சத்தான உணவுகளையும் அவ்வப்போது ஒரு கை பார்க்கத் தவறாதீர்கள்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)