இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
- அ.வென்சி ராஜ்
இளமையே....
எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை....
தோலின் அழகிலா?
முடியின் கருமையிலா?
முகத்தின் அழகிலா?
எதனைக் கொண்டு உன்னை அளப்பது...?
எதுவரை உனது எல்லை...?
என்னைக் கேட்டால் உனக்கு ஒரு புது அர்த்தம் கூறவா...?
சிறு புன்னகையோடு கூடிய சிங்கார முகத்தில். ...
கண்கள் சுருங்க நம்மை ஆரத்தழுவும் சிரிப்பில்....
ஐம்பதிலும் இளமை உண்டு...
அறுபதிலும் இளமை பொங்கும்...
எழுபதிலும் இளமைத்துள்ளும்...
எண்பதிலும் இளமை ததும்பும். ..
இளமையே உனக்கு ஏது வயது வரம்பு. ..
யார் யாரோ சொல்லிப்போனார்கள்...
இளமை போனால் வராது என்று...
யார் கூறியது. ?
மனதின் இளமையை யாரால் விரட்டக் கூடும்?
ஆம்...
சிறு புன்னகையிலும், சலசலக்கும் சிரிப்பொலியிலும்.....
ஐம்பதிலும் இளமை உண்டு...
அறுபதிலும் இளமை பொங்கும்...
எழுபதிலும் இளமைத்துள்ளும்...
எண்பதிலும் இளமைத் ததும்பும். ..
இளமையை கடந்து போவதாக நினைக்காதீர்கள். ...
இளமையோடு புன்னகைத்து வாழ்வை கடந்து செல்லுங்கள்....
நேர்மறை எண்ணத்தோடு நிதமும் வாழ்ந்து பாருங்கள்....
குறைகளைக் களைந்து நிறைகளை புகழுங்கள்...
அனைவரிடமும் அன்பை பகிருங்கள்....
என்றுமே குழந்தையின் குதூகலத்தோடு இருங்கள்.....
ஐம்பதிலும் இளமை உண்டு....
அறுபதிலும் இளமை பொங்கும்...
எழுபதிலும் இளமைத்துள்ளும். ..
எண்பதிலும் இளமைத்ததும்பும்....
நம் மனதளவில் இளமையோடு கடந்து செல்லுங்கள்...
வாழ்க்கை இனிக்கும் இளமையாகும் எப்போதும்..!
(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)