என் அழகிய வளியே!

Nov 27, 2025,04:48 PM IST

- அ.வென்சி ராஜ்


பூகோளத்தை பிறகோளத்தில் இருந்து தனித்து காட்டுவதில் உனக்கு தான் அத்தனை பெருமையும்...


எத்தனை அடுக்காய் நீ பரவி கிடந்தாலும் எனக்கு அதெல்லாம் தேவையில்லை...

எனக்குத் தெரிந்தது  ஒன்றுதான்...


என்னருகில் நீ இருப்பாய்...

உன் அருகில் நான் இருப்பேன்... 


எனை விட்டு நீ பிரிந்தாலும். ..

உனை விட்டு நான் பிரிந்தாலும்...

இது வெற்றுடல் தான் என்று சொல்லி...

வேறு இடத்திற்கு எனை கொண்டு செல்ல ...

எட்டு கால்கள் வந்தல்லவா என் அருகில் நின்றிடுமே... 


மகிழ்வான வாழ்வுதனை என்றுமே எனக்கு அளிக்க.. 

என்னுள் வந்து உயிர் வளியாய் உலவுகிறாய்... 

விண்ணில் இருந்து தென்றலாய் தித்திக்கிறாய். .. 

சாதாரண காற்றாய் வந்து சகலமும் பார்த்துக் கொள்கிறாய்.. 

சற்று கோபமாய் இருந்தால் புழுதி வாரி கொட்டுகின்றாய். .. 

அனல் பறக்கும் கோபத்தில்

ஆழி சென்று  கடும்புயலாய் மிரட்டுகிறாய்... 

சுழன்று வரும் சோழி போல சுழல் காற்றாய் சீறுகின்றாய். . . 




உன்னை சுவாசித்து...

தென்றலாய் நேசித்து...

பழகிய நாங்கள்..

உன் விஸ்வரூபம் கண்டு வியந்து போகின்றோம்...


உன் இயல்பு அத்தனையும் தெரிந்திருந்தும்...

என் விருப்பம் ஒன்று மட்டுமே...

என்னருகில் நீ இருப்பாய்..

உன் அருகில் நான் இருப்பேன்... 


தீச்சுடர்தான் எரிந்திடவே

கட்டாயமாக நீ தான் வேண்டும்...

எரிகின்ற பொருள் அணைக்க. ..

இன்னொரு வடிவாயும்  நீதான் வேண்டும்... 


என்ன விந்தை என்று பார்த்தால் எங்கனுமே நீ தான் இருக்காய். .. 


நீ இல்லாத இடம் தனையே..

கண்டறிய ஆசைப்பட்டு எட்டு திக்கும் சுற்றி வந்தேன்..

எங்கனுமே உன் முகம் தான்...


பள்ளி சென்று படிக்கையிலே பாடத்திலும் நீ இருக்கிறாய்....

வீடு வந்து படுக்கையிலே விரவித்தான்  நீ இருக்கிறாய்...... 


மனமும் இல்லை. ..

நிறமும் இல்லை..

சுவையும் இல்லை..

உருவமில்லை....

வடிவ மில்லை...

இப்படி ஒன்னும் இல்லா 

 உன்னை வெச்சி மொத்த உலகமும் இயங்குதப்பா.. 


புல்லசைத்து...

பூவசைத்து...

மரமசைத்து...

மகிழ்வளிக்கும்...

என் உயிர் வளியே...

காற்றே...

என் அருகில் நீ இருப்பாய்...

உன் அருகில் நான் இருப்பேன்.


(ஆசிரியை அ. வென்சி ராஜ், திருவாரூரைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். ஆசிரியையாக மட்டுமல்லாமல், பட்டிமன்ற பேச்சாளர், தன்னம்பிக்கை பேச்சாளர்,  சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டவரர் அ. வென்சி ராஜ்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்

news

தவெக.,வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!

news

கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!

news

தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!

news

2026ல் மக்கள் புரட்சி ஏற்பட்டு விஜய் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

news

விஜய்யுடன் கை கோர்த்த செங்கோட்டையன்.. அதிமுகவுக்கு குட்பை சொன்ன தவெக!

news

செங்கோட்டையன் பற்றி பதிலளிக்க ஒன்றுமில்லை...எடப்பாடி பழனிச்சாமி பதில்

news

உருவானது டித்வா புயல்...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

news

108 ஆம்புலன்ஸ் அவசர எண் மாற்றம் - புதிய எண்கள் அறிவிப்பு.. மக்களே நோட் பண்ணிக்குங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்