சென்னை : இன்று காலை முதலே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மிகுந்த பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இந்த கூட்டணி தொடருமா? அல்லது உடையும் என்ற நீண்ட கால குழப்பம் இன்று க்ளைமேக்சை எட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் இன்று மாலைக்குள் முடிவு தெரியும் என சொல்லப்படுகிறது.
ஒரு புறம் காங்கிரஸ் ஊடக தொடர்பாளர் போபண்ணா, திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்கிறார். மற்றொரு புறம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்றுள்ள செல்வ பெருந்தகையும், ப.சிதம்பரமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொகுதி பங்கீட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையிலும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படாமல் இழுபறியான நிலையே உள்ளது என சொல்லப்படுகிறது.
இந்த இறுதி கட்ட ஆலோசனையின் போது காங்கிரஸ் தரப்பில் 35-40 சீட்டுகள் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தாங்கள் முன் வைத்த கோரிக்கைகளை தளர்த்த போவதில்லை என்பது காங்கிரஸ் உறுதியாக உள்ளதாம். அதே போல் திமுக தலைமையும் இறங்கி வர மறுத்து பிடிவாதமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இரு தரப்பும் தங்களின் முடிவில் உறுதியாக இருப்பதாக உள்ளதால் கூட்டணி குறித்த முடிவில் இது வரை எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தங்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே திமுக.,வின் கூட்டணி உறுதி செய்யப்படும் என்பதால் இந்த முறை தங்களின் பலத்தை காட்டி, அதிக இடங்களை பெற்றே தீர வேண்டும் என்பதில் காங்கிரஸ் மிக உறுதியாக உள்ளதாம். திமுக தரும் 25 சீட்டுகளை இந்த முறை ஏற்க வேண்டாம் என்பதில் ராகுல் காந்தியும் உறுதியாக இருக்கிறாராம். ஆனால் திமுக தரப்பில், காங்கிரசின் நிபந்தனைகளை ஏற்று அதிக சீட் கொடுத்தால் அதே ஃபார்முலாவை மற்ற கூட்டணி கட்சிகளும் கையில் எடுக்க வாய்ப்புள்ளது. அதோடு தொகுதி பங்கீட்டிலும் சிக்கல் வரும் என்பதால் தங்கள் முடிவில் மிக உறுதியாக திமுக தலைமை உள்ளதாம்.
இரண்ட கட்சிகளுமே பிடியை தளர்த்த தயாராக இல்லாததால் இந்த கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் மற்ற கட்சிகளும் வெளியேற வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அது திமுக.,விற்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். அதே சமயம், காங்கிரசை தக்க வைப்பதற்காக அவர்களின் நிபந்தனைகளுக்கு திமுக அடி பணிந்தால், அது கூட்டணிக்குள் வேறு வகையில் நெருக்கடியை ஏற்படுத்தும். இதனால் என்ன செய்வது என தெரியாமல் இருதலை கொல்லி எறும்பு போல் திண்டாடிக் கொண்டிருக்கிறது திமுக.
திமுக மட்டுமல்ல காங்கிரசிற்கும் கிட்டதட்ட இதே நிலை தான். என்ன ஆனாலும் சரி திமுக கூட்டணியில் இருந்து விலக கூடாது என சிலர் வருகிறார்கள். அப்படி எல்லாம் இருக்க முடியாது. திமுக கூட்டணியை விட்டு வெளியேறி இந்த முறை தவெக பக்கம் செல்லலாம் என கட்சிக்குள் இரு வேறு விதமாக குரல்கள் எழுந்து வருவதால் எந்த முடிவை எடுப்பது என தெரியாமல் காங்கிரசும் குழப்பத்தில் தான் உள்ளது.
தடையினை உடைத்திடு
மாசி முழுநிலவு நாளில் வண்ணங்கள் கொண்டாடும் விழா!
ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி...!
மனிதர்களுக்கு மட்டும்தானா.. வனவிலங்குகளுக்கும் சிறப்பு தினம் இருக்கே!
கொண்டாடுவோம் மகளிரை.. இந்தியப் பெண்களை சிகரம் ஏற்றிய பச்சேந்திரி பால்!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை
ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்!
{{comments.comment}}