போருக்கு தயாராவதற்கு முன் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன்: தவெக தலைவர் விஜய்!

Meenakshi
Sep 13, 2025,05:14 PM IST

திருச்சி: அந்த காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தான் போருக்கு செல்வார்கள். அதுபோல தான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 


தவெக தலைவர்  தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை இன்று திருச்சி மரக்கடை பகுதியில் துவங்கி பேசுகையில்,  அந்த காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தான் போருக்கு செல்வார்கள். அதுபோல தான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன். நல்ல காரியங்களுக்கு ஒரு சில மண்ணைத்தொட்டால் நல்லதென பெரியவர்கள் சொல்வார்கள். அப்படி தான் திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனை ஏற்படும் என்று வந்துள்ளேன். ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன் உங்களை சந்திக்க வந்துள்ளேன். 




1956 அறிஞர் அண்ணா தேர்தலில் நிற்க நினைத்ததும் திருச்சியில்தான்.  1974-ல் எம்ஜிஆர் முதல் மாநாடு நடத்தியது திருச்சியில் தான். திருச்சிக்கு என்றே நிறை வரலாறு இருக்கு. கல்விக்கு பேர் போன இடம். கொள்கையுள்ள மண் இது. இன்னைக்கு உங்கள எல்லாரையும் பார்க்கும் போது மனசுக்குள்ள ஒரு பரவம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.