நேரம் கடந்தாச்சு.. இன்னும் பிரச்சாரத்தை துவக்கவில்லை.. என்ன செய்ய போகிறார் விஜய்?

Sep 13, 2025,11:32 AM IST

திருச்சி : தவெக தலைவர் தலைவர் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை இன்று திருச்சி மரக்கடை பகுதியில் துவக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் போலீசார் அனுமதித்த நேரத்தை கடந்தும் இதுவரை விஜய் தனது பிரச்சாரத்தை துவக்கவில்லை.


தவெக தலைவர் விஜய் விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் மாநில மாநாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டார். இந்த இரண்டு மாநாட்டிலும் லட்சக்கணக்கில் ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்தனர். மாநாட்டை தொடர்ந்து தனது தேர்தல் பிரச்சார பயணத்தை செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் துவக்கி, டிசம்பர் 20ம் தேதி மதுரையில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக விஜய்யின் தேர்தல் பிரச்சார பயணம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். 


திருச்சியில் பல்வேறு இடங்களை தவெக.,வினர் குறிப்பிட்டும் அந்த இடங்களில் போலீசார் அனுமதி வழங்கவில்லை. கடைசியாக 23 நிபந்தனைகளுடன் விஜய்க்கு பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ரோட்ஷோ நடத்தக் கூடாது, 10.35 முதல் 11 மணி வரையிலான நேரத்தில் மட்டுமே விஜய் பேச வேண்டும், பட்டாசுகள் வெடிக்கக் கூடாது, விஜய் செல்லும் வாகனத்துடன் 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்க திட்டமிட்டார் விஜய்.




தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை துவக்குவதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், தனது பிரச்சாரத்திற்காக பிரத்யேகமாக நவீன வசதிகளுடன் தவெக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள வாகனத்தில் ஏறி திருச்சி மரக்கடை பகுதி நோக்கி புறப்பட்டார். ஆனால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விஜய்யின் வாகனம் புறப்பட்டதில் இருந்தே, சாலையில் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், மக்கள் கூடி இருந்து விஜய்க்கு வரவேற்பு அளித்தனர். ஆயிரக்கணக்கான மக்களுக்கு நடுவே மெதுவாக ஊர்ந்து விஜய்க்கு வாகனம் மரக்கடை பகுதி நோக்கி பயணம் செய்கிறது.


விஜய்க்க பிரச்சாரம் செய்வதற்காக போலீசார் ஒதுக்கிய நேரம் காலை 10.35 முதல் 11 மணி வரை மட்டுமே. அந்த வகையில் விஜய் பிரச்சாரத்திற்காக திருச்சி மரக்கடையில் பேசுவதற்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஏற்கனவே முடிந்து விட்டது. ஆனால் மரக்கடை பகுதிக்கு விஜய் வந்து சேருவதற்கே இன்னும் பல மணி நேரம் ஆகும் என சொல்லப்படுகிறது. இதனால் திட்டமிட்டபடி விஜய்யால் திருச்சி மரக்கடை பகுதியில் தனது பிரச்சாரத்தை துவங்க முடியவில்லை. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரிவயில்லை.


ஏறக்கனவே அறிவித்த மரக்கடை பகுதியில் அவரால் பிரச்சாரம் செய்ய முடியுமா என்பதிலும் குழப்பம் எழுந்துள்ளது. காரணம், தாங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறினால் பிரச்சாரத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளார்கள். இதனால் தற்போது மரக்கடை பகுதியை அடைந்ததும் விஜய் என்ன செய்ய போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொடர் உயர்விற்கு பின்னர் குறைந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?

news

நேரம் கடந்தாச்சு.. இன்னும் பிரச்சாரத்தை துவக்கவில்லை.. என்ன செய்ய போகிறார் விஜய்?

news

விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்

news

விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!

news

கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

news

திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!

news

நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து

news

விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!

news

வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்

அதிகம் பார்க்கும் செய்திகள்