சென்னை : திமுக., மிரட்டலுக்கு பயந்து தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என தவெக.,வில் ஆதவ் அர்ஜூனா பேசி இருந்தார். இதற்கு பாஜக தமிழ்க தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிந்ததுடன், ஆதவ் அர்ஜூனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற தவெக ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்த கொண்ட ஆதவ் அர்ஜூனா பேசிய போது, திமுக., மிரட்டலுக்கு பயந்து தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றார். இதற்கு பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து ரஜினி ரசிகர்களும் ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக முழக்கமிட்டு வந்தனர். ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தவெக.,வை தாங்கள் புறக்கணிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் தனது விளக்கத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில் அவர், தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி, திரு.தொல்.திருமாவளவன், திரு.எஸ்.பி.வேலுமணி, நண்பர் திரு.அண்ணாமலை, திரு.அர்ஜுனமூர்த்தி, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு.ஜான் பாண்டியன்,, திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திரு.நக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்"
என குறிப்பிட்டுள்ளார்.
ஆதவ் அர்ஜூனா சொன்ன கருத்து உண்மைக்கு புறம்பானது என ரஜினிகாந்த் இன்று அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}